ஆசிரியர் தகுதித்தேர்வு அக்டோபர் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெற்றது. இதில் குறைந்த அளவிலேயே தேர்ச்சி பெற்றனர். இதனையடுத்து மீண்டும் அக்டோபர் 3ம் தேதி நடைபெறும் எனவும்,புதிதாக யாரும் விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்க தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசிரியர் தகுதி தேர்வு அக்டோபர் 14ம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தகுதி தேர்வு வாரிய தலைவர் சென்னை ஐகோர்ட்டில் கூறினார். புதிதாக விண்ணப்பிப்பவர்கள் வரும் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment