Pages
Thursday, December 27, 2012
Tuesday, November 20, 2012
தற்போது பணியிடம் நிரப்ப தயாராக உள்ள பணியிட பட்டியல்.
1. PG TRB யில் வெற்றி பெற்றவர்கள் பட்டியல்.
2. TET தாள் 2 இல் வெற்றி பெற்றவர்கள்.
3. TET தாள் 1 இல் வெற்றி பெற்றவர்கள்.
|
Sunday, October 28, 2012
டி.இ.டி.: 1,716 பேருக்கு
மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு
ஜூலையில் நடந்த டி.இ.டி., தேர்வில், முதல் தாளில் தேர்ச்சி பெற்ற, 1,716 பேர், புதிய விதிமுறைகளின்படி தேர்வு செய்ய இருப்பதால், அவர்களுக்கு, இம்மாதம், 31ம் தேதி, மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
டி.இ.டி., முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள், தற்போதுள்ள நடைமுறை விதிகளின்படி, வேலைவாய்ப்பு பதிவு முன்னுரிமை அடிப்படையில், இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கு, தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே, தேர்ச்சி பெற்றவர்கள், வேலைவாய்ப்பு பதிவை பதிவு செய்துள்ள மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில், இம்மாதம், 31ம் தேதி ஆஜராகி, வேலைவாய்ப்பு பதிவு அட்டையின், சான்றொப்பமிட்ட இரு நகல்களை, சமர்ப்பிக்க வேண்டும்.
சான்றிதழ் சரிபார்த்தலுக்காக அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தின் நகலையும், "ஹால் டிக்கெட்' நகலையும், எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வுக்கான புதிய விதிமுறையின்படி, டி.இ.டி., தேர்வில் பெறும் மதிப்பெண்கள், "வெயிட்டேஜ்' அடிப்படையில், 60 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படுகிறது. அதோடு, பிளஸ் 2 மற்றும் ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், வெயிட்டேஜ் அடிப்படையில், 40 மதிப்பெண்களுக்கும் கணக்கிட்டு, 100 மதிப்பெண்களுக்கு, தேர்வர் பெறும் மதிப்பெண் அடிப்படையில், தேர்வு செய்யப்படுவர்.
அதன்படி, இடைநிலை ஆசிரியரைப் பொறுத்தவரை, பிளஸ் 2க்கு, 15, ஆசிரியர் கல்வி பட்டய படிப்பிற்கு, 25 மற்றும் டி.இ.டி., தேர்வில், 60 என, 100 மதிப்பெண்கள் அடிப்படையில், தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்.
இதனால், பிளஸ் 2 மற்றும் ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வில், 1,716 பேர் பெற்ற மதிப்பெண் விவரங்களை ஊர்ஜிதப்படுத்தவும், சான்றிதழ் நகல்களை பெறவும், இம்மாதம், 31ம் தேதி, மீண்டும் வருமாறு, டி.ஆர்.பி., அழைப்பு விடுத்துள்ளது. பட்டதாரி ஆசிரியருக்கான அறிவிப்பு, இன்று வெளியாகும் என தெரிகிறது.
டி.இ.டி. மறுதேர்வு முடிவு
ஓரிரு நாளில் வெளியீடு
டி.இ.டி. மறுதேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணி 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. எனவே தேர்வு முடிவுகள் நாளையோ, திங்கட்கிழமையோ வெளியாகலாம் என டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டி.இ.டி., மறு தேர்வு கடந்த 14ம் தேதி நடைபெற்றது. இதில் 4.75 லட்சம் பேர் பங்கேற்றனர். கடந்த ஜுலை மாதம் நடந்த முதல் டி.இ.டி., தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால், சமீபத்தில் நடந்த மறுதேர்வு முடிவு, தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜுலை மாதம் நடந்த தேர்வைவிட, இந்த தேர்வுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டதாலும், வினாத்தாள் எளிதாக இருந்ததாலும் தேர்ச்சி சதவீதம் நன்றாக இருக்கும் என டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Wednesday, October 10, 2012
TEACHERS-DHILIP RESOURCES: G.O for new appointment of teachers
TNTET REEXAM TRB ASWERS PAPER I AND PAPER II
CLICK TO DOWNLOAD
TEACHERS-DHILIP RESOURCES: G.O for new appointment of teachers: ஆசிரியர் நியமனத்திற்க்கான விதிமுறைகள்Thursday, October 4, 2012
Friday, September 21, 2012
டி.இ.டி., தகுதித்தேர்வு ஒத்திவைப்பு
ஆசிரியர் தகுதித்தேர்வு அக்டோபர் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெற்றது. இதில் குறைந்த அளவிலேயே தேர்ச்சி பெற்றனர். இதனையடுத்து மீண்டும் அக்டோபர் 3ம் தேதி நடைபெறும் எனவும்,புதிதாக யாரும் விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்க தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசிரியர் தகுதி தேர்வு அக்டோபர் 14ம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தகுதி தேர்வு வாரிய தலைவர் சென்னை ஐகோர்ட்டில் கூறினார். புதிதாக விண்ணப்பிப்பவர்கள் வரும் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
Thursday, September 6, 2012
1. நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையூறு செய்பவை கவனச் சிதைவு ஆகும்.
2. நம் நினைவில் என்றும் தங்கும் வகையில், லாரிகளின் பின்புறத்தில் பொதுவாக எழுதப்பட்டிருக்கும் 'ஒலி எழுப்புக' என்பதற்கு பதில்...? - ஒலி எனக்கு (Sound to me)
3. கவனம் - புலன் காட்சிகள் அடிப்படையாகும்.
4. கவனித்தல் நமது மன வாழ்க்கையுடன் எப்போதும் இணைந்து காணப்படுகிறது.
5. ஒருவனுடைய கற்கும்திறன் உடல் - உடல் வளர்ச்சிகள் ஒட்டியே அமைகிறது.
6. வளர்ச்சியினைக் குறிக்கும் நடத்தைகளும் செயல்களும் வளர்ச்சிசார் செயல்கள் ஹெலிகாப்டர் என்பவரால் வர்ணிக்கப்பட்டது.ரா
7.முதிர்ச்சியடைந்த ஒருவனின் கவனம் 7 இருக்கும்.
8.கவன மாற்றம் என்பது தொடர்ந்து ஒரு பொருளின் மீது 10 விநாடிகளுக்கு மேல் நாம் கவனம் செலுத்த முடியாது.
9. சில சமயங்களில் நமது கவனத்தைக் கவரும் பொருள்களின் தன்மைகளை- பொருள்கள் காரணிகள்.
10. பிராட்பென்ட் என்பவரது கோட்பாடு - தற்காலச் செய்திக் கோட்பாடுகள்.
11. ADOLESENCE என்ற ஆங்கிலச் சொல்லின் அடிப்படைப் பொருள் என்ன? - வளருதல்
12. ஒப்புடைமை விதி என்பது - குழுவாக எண்ணுதல்.
13. புலன்காட்சியை முறைப்படுத்தும் நியதிகள் எத்தனை? - ஐந்து
14. மனிதனின் புலன் உறுப்புகள் - அறிவின் வாயில்கள்.
15. ''உளவியல் என்பது நனவு நிலை பற்றியது'' இதனை வலியுறுத்தியவர் - வாட்சன்
16. உளவியல் என்பது மனது பற்றியது என்று கூறியவர் - கான்ட்
17. உளவியல் என்பது ஆன்மா பற்றியது அல்ல என்று கூறியவர் - கான்ட்
18. உளவியல் என்பது மனிதனின் நடத்தை, மனித உறவு முறைகளைப் பற்றியப் படிப்பாகும் எனக் கூறியவர் - குரோ, குரோ
19. எவ்விதக் கருவியும் இன்றிப் பிறருடைய நடத்தையை அறிந்துகொள்ள உதவும் முறை - போட்டி முறை
20. நாம் கோபத்தில் இருக்கும்போது நமது முகம் சிவப்பாகிறது, இந்த நடத்தையின் தன்மைகளை அறிய உதவும் முறை - அகநோக்கு முறை.
21. இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை நன்கு தூங்கிய குழந்தை, மற்றொன்று தூங்காத குழந்தை இவர்களின் கற்றலை ஒப்பிடுவதற்கு உதவும் முறை - கட்டுப்படுத்தப்பட்ட உற்று நோக்கல் முறை.
22. வாக்கெடுப்பு எந்த உளவியல் முறையின் ஒர் வகை - வினாவரிசை முறை.
23. பிறப்பிலிருந்து முதுமை வரைக்கும் ஒருவரது கற்றல் அனுபவங்களை விவரிப்பதுதான் கல்வி உளவியல் என்று கூறியவர்- ஏ.குரோ, சி.டி.குரோ.
24. தேர்வு அடைவுச் சோதனையில் நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை - பரிசோதனை முறை.
25. ஒரு நல்ல சமூக அமைப்புக்கான நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை - பரிசோதனை முறை.
26. புலன் பயிற்சிக் கல்வி முறையை புகுத்தியவர் - மாண்டிசோரி.
27. டோரனஸ் என்பவர் தந்துவவாதி.
28. தன் நிறைவு தேவை கொள்கையை எடுத்துரைத்தவர் - மாஸ்லோ
29. சாதனை ஊக்கக் கொள்கையை விரிவாக்கியவர் -மெக்லீலாண்ட்
30. சமூக மனவியல் வல்லுநர் - பாவ்லாவ்
31. முன்பருவக் கல்வியுடன் தொடர்பியல்லாதவர் - ஜான்டூயி
32. மாஸ்லோவின் தேவைகள் படி நிலைகளுள் முதல்படி எதைக் குறிக்கும் - அடிப்படைத் தேவைகள்.
33. மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர் - ஃபிராய்டு.
34. முதன்முதலில் ஆர்வத்தின் நிலை என்னும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் - மெக்லிலாண்டு.
35. தேர்வுகள் எதற்காக என்ற எண்ணம் கொண்டவர் - ஏ.எஸ். நீல்
36. குழப்பமான கோட்பாடுடைய புத்தி கூர்மை என்பதைத் தெரிவித்தவர் - தார்ண்டைக்
37. சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் - டார்வின்
38. மனவெழுச்சி எழுவதற்கான காரணம் என்ன? - மனவெழுச்சி நீட்சி
39. குழந்தைப் பருவத்திலும் முன் பிள்ளைப் பருவத்திலும், மனவெழுச்சிகளில் இருமுகப் போக்குதிசை தோன்றுகிறது.
மேலும் வினாக்களையும் விடைகளையும் காண கீழே உள்ள மேலும் காண என்னும் பொத்தானை அழுத்தவும்...
40. 'சோபி' என்பது என்ன? - ரூஸோ அவர்களால் எழுதப்பட்ட எமிலி புத்தகத்தின் ஒரு பாத்திரம்.
41.உட்காட்சி வழிக் கற்றலை உருவாக்கியவர் - கோஹலர்
42. கோஹலரால் தனது பரிசோதனையில் பயன்படுத்தப்பட்ட குரங்கின் பெயர் - சுல்தான்.
43. ஆக்க நிலையுத்தல் மூலம் கற்றலை உருவாக்கியது - பால்லாவ்.
44. மனச் செயல்களினால் ஏற்படும் மாற்றம் - அறிவுத்திறன் வளர்ச்சி.
45. மன உணர்வுகள் மேலோங்கிய நிலைக்கு என்ன பெயர் - மனவெழுச்சி.
46. சிந்தித்தல், தீர்மானித்தல் போன்ற மனச் செயல்களின் மையமாகத் திகழ்வது - பெரு மூளை.
47. ஒரு குழந்தை தான் கண்கூடாகப் பார்த்து, சிந்தித்து செயல்படும் நிலை அறிவு வளர்ச்சித் திறனாகும் என பியாஜே குறிப்பிடுகின்றார். இது அறிவு வளர்ச்சியின் எத்தனையாவது நிலை? - மூன்றாம் நிலை.
48. பிறந்த குழந்தையின் மனவெழுச்சி வளர்ச்சி எதனுடன் அதிகம் தொடப்புடையது? - உடல் தேவை
49. அடிப்படை உளத்திறன்கள் கோட்பாடு என்ற நுண்ணறிவுக் கோட்பாட்டினைக் உருவாக்கியவர் யார? -எல். தர்ஸ்டன்.
50. தர்ஸ்டனின் நுண்ணறிவுக் கொள்கையில் உள்ள மனத்திறன்களின் எண்ணிக்கை எத்தனை? - ஏழு
51. நடத்தையை உற்று நோக்கல், பதிவு செய்தல், ஆய்வு செய்தல், பொதுமைப் படுத்துதல் போன்ற படிகளைக் கொண்ட உளவியல் முறை - உற்று நோக்கல் முறை.
52. மனவெழுச்சி என்பது - உணர்ச்சி மேலோங்கிய நிலை
53. புகழ்பெற்ற அமலா, கமலா சகோதரிகளின் ஆய்வு எதை வலியுறுத்துகின்றது? - சூழ்நிலை.
54. ஒத்த இயல்பு ஒத்த இயல்பினை உருவாக்கும் எனக் கூறியவரு? - மெண்டல்
55. ஒரு கரு இரட்டையர் சோதனை நிகழ்ந்த இடம் எது? - அயோவா
56. உளவியல் என்பது மனிதனின் நடத்தை, நடத்தையின் காரணங்கள், நிபந்தனைகள் ஆகியவற்றைப் பற்றிப் படிப்பதாகும் எனக் கூறியவர் - மக்டூகல்
57. தற்கால உளவியல் கோட்பாடு என்ன? - மனிதனின் நடத்தைக் கோலங்கள் பற்றியதாகும்.
58. உளவியல் என்பது மனிதனின் நனவற்ற நிலையே எனக் கூறியவர் -சிக்மண்ட் பிராய்டு.
59. உளவியல் என்பது மன அறிவியல் அல்ல என்று கூறியவர் - வாட்சன்.
60. பண்டைக் காலத்தில் உளவியல் என்ற சொல்லின் பொருள் -ஆன்மா.
61. பண்டைக் காலத்தில் ஒருவரது நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை- அகநோக்குமுறை.
62. மாணவர்களின் கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - மதிப்பீட்டு முறை
63. வகுப்பில் மாணவர்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை - உற்று நோக்கல் முறை
64. உயிரினங்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை - பரிசோதனை முறை
65. அறிவு வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பது - மரபு + சூழ்நிலை
66. கோபம், மகிழ்ச்சி, கவலை, பயம் இவை எதனால் செய்யப்படும் செயல்கள் - மனவெழுச்சி வளர்ச்சி.
67. சிந்தித்தல், கற்பனை போன்றவை எதனால் செய்யப்படும் செயல்கள் - அறிவுத் திறனால்.
68. உடலால் செய்யப்படும் செயல்கள் எத? - நீந்துதல்.
69. அறிதல் திறன் வளர்ச்சிக் கொள்கையை உருவாக்கியவர் - பியாஜே
70. மரபின் முக்கியத்துவம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர் யார? - கால்டன்.
71. வாழ்க்கையில் சிற்ப்பாக வெற்றி பெறுவதற்கு உதவும் உளவியல் காரணி எது? - நுண்ணறிவு.
72. கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை விவரிக்கும் உளவியல் பிரிவு எத? - கல்வி உளவியல்
73. பிறரைப் பற்றி அறிந்துகொள்ளப் பயன்படும் உளவியல் முறை - அகநோக்கு முறை.
74. தர்க்கவியல் எந்த இயலின் ஒரு பகுதியாகும் - மெய்விளக்கவியல்.
75. 'உன்னையே நீ அறிவாய்' எனக் கூறியவர் - சாக்ரடீஸ்
76. உற்றுநோக்கலின் படிகள் - ஏழு
77. உற்றுநோக்கலின் இறுதிப்படி - நடத்திய ஆய்வு செய்தல்
78. வாழ்க்கைச் சம்பவத் துணுக்கு முறை எந்த முறையுடன் அதிக தொடர்புடையது? - உற்று நோக்கல் முறை.
79. பரிசோதனை முறைக்கு வேறு பெயர் என்ன? - கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல்.
80. மனிதன் சிந்தனை செய்வதன் வாயிலாக பல வாழ்வியல் உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று கூறுவது - தர்க்கவியல்
81. அனிச்சைச் செயல்கள் நிறைந்த பருவம் - தொட்டுணரும் பருவம்.
82. குற்றம் புரியும் இயல்பு பரம்பரைப் பண்பாகும் எனக் கூறியவர் - கார்ல் பியர்சன்
83. அடலசன்ஸ் எனப்படும் சொல் எந்தமொழிச் சொல் - இலத்தீன் மொழிச் சொல்
84. குரோமோசோம்களில் காணப்படுவது - ஜீன்ஸ்
85. குழந்தைகளை நல்ல சூழலில் வளர்க்கும்போது நுண்ணறிவு ஈவு கூடியது எனக் கூறியவர் - லிப்டன்
86. திரிபுக் காட்சி அல்லது தவறான புலன்காட்சி ஏற்படுத்துவதற்குக் காரணம் - சூழ்நிலை
87. ஒருவர் புளிய மரத்தின் மீது பேய்கள் நடமாடுவது போன்று எண்ணுதல் - இல்பொருள் காட்சி
88. புலன்காட்சிவழி முதலில் தோற்றுவித்த ஒருபொருள் அன்றியே அப்பொருள் பற்றிய உணர்தலை மனபிம்பம் என்கிறோம்.
89. பொதுமைக் கருத்து என்பதின் பொருள் என்ன - புத்தகம்.
90. புருனரின் பொதுமைக் கருத்து உருவாகும் படிநிலைக் கோட்பாட்டு நிலைகள் எத்தனை -மூன்று நிலைகள்.
91. ஜீன் பிலாஹே என்பவர் எந்த நாட்டு அறிஞர் - சுவிட்சர்லாந்து
92. புலன்களின்றும் மறைக்கப்பட்டவை, மறக்கப்படுகின்றன. பிறந்து 10 மாதங்கள் சென்றபின் - பொருள்களின் நிலைத்தனமை பற்றி குழந்தை அறிகிறது.
93. குழந்தைகளின் மொழி வளர்ச்சி தங்கள் தேவைகளை பிறருக்குத் தெரிவிக்க - பேச்சுக்கு முந்தைய நிலை
94. கற்பனை பிம்பங்கள் அல்லது சாயல்களின் துணைக்கொண்டு திகழும் சிந்தனை - கற்பனை
95. ஒருவன் புலன்காட்சி வழியே அறிந்த ஒன்றன் பிரதியாக இருப்பின் யாது? - மீள் ஆக்கக் கற்பனை.
96. நம் கற்பனையில் உதவி கொண்டு நாமே ஒரு சிறுகதை அல்லது கவிதையைப் படைத்தாலோ அது - படைப்புக்கற்பனை.
97. ஒர் இலக்கை அடைய முயலும் ஒருவனுக்கு அவ்விலக்கை அடைய முடியாதபடி அவனுக்கெதிரே சில தடைகள் குறுக்கிடுமானால் அது - பிரச்சனை எனப்படும்.
98. எரிக்கன் சமூகவியல்பு வளர்ச்சிப் படிநிலைகள் - எட்டு.
99. கற்றலின் முக்கிய காரணிகளில் ஒன்று - கவர்ச்சி
100. வெகுநாட்களாக நமது நினைவில் இருப்பவை - பல்புலன் வழிக்கற்றல்.
101. தர்க்கவியல் Logic எந்த இயலின் ஒரு பகுதியாகும் - உளவியல்
102. கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை விவரிக்கும் உளவியல் பிரிவு - கல்வி உளவியல்
103. உளவியல் என்பது - மனித நடத்தையை ஆராயும் அறிவியல்.
104. உற்று நோக்கலின் படி - நான்கு
105. லாகஸ் என்பது - ஆராய்தலைக் குறிக்கும் சொல்.
106. சைக்கி என்பது - உயிரைக் குறிக்கும் சொல்
107. சைக்காலஜி (PSYCHOLOGY) எனும் சொல் எந்த மொழிச் சொல் - கிரேக்க மொழிச் சொல்.
108. உற்றுநோக்கலின் இறுதிப்படி - நடத்தையைப் பொதுமைப் படுத்துதல்
109. கல்வி உளவியலின் பரப்பெல்லைகள் - மாணவர், கற்றல் அனுபவம், கற்றல் முறை, கற்ரல் சூழ்நிலை.
110. பரிசோதனை முறைக்கு வேறுபெயர் - கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல்.
111. மாணவர்களின் கற்ரல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - தேர்ச்சி முறை
112. வாழ்க்கைச் சம்பவத்துணுக்கு முறை எந்த முறையுடன் அதிகத் தொடர்புடையது - உற்றுநோக்கல் முறை.
113. கல்விநிலையங்களில் மாணவர்கலின் நடத்தையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவும் மிக முக்கியமானப் பதிவேடு - திறன் பதிவேடு.
114. அண்டம் (சினை முட்டை) விந்தணுவைப் போன்று எத்தனை மடங்கு பெரியது - 8500 மடங்கு.
115.அனிச்சை செயல் எந்த வயது வரை நடைபெறும் - பிறப்பு முதல் 18 மாதங்கள் வரை.
116. மழலைப் பேச்சு எந்த வயது வரை ிருக்கும் - 4-5 வயதுவரை
117. எந்தக் குழந்தைகள் 2-6 வயதுவரை தொடர்ந்து பேசுவது இல்லை - திக்கி பேசும் குழந்தைகள்.
118. எது மனப்பிறழ்வுகளுக்கு வழி வகுப்பதில்லை - அடக்கி வைத்தல்.
119. குழப்பம், கூச்சம், பொறாமை, தற்பெருமை, குற்ற உணர்வு போன்ற உணர்வுகளை எவ்வாறு அழைக்கலாம் - சிக்கலான மனவெழுச்சிகள்.
120. மரபின் தாக்கம் எப்போது தெரிகிறது - பிறப்பின்போது.
121. சூழ்நிலையின் தாக்கம் எப்போது தெரிகிறது - வளரும்போது.
122. உடல் பெருக்கம் என்பது - உடலின் எடையும் உயரமும் அதிகரித்தல்.
123 . உடல் உறுப்புகள் தாமகவே வளர்ந்து பக்குவமடைவதற்கு என்ன பெயர் - முதிர்ச்சி.
124. வளர்ச்சிநிலை எந்த வயதில் ஒரு திரளாக உடல் பெருகுகிறது - 6வது வயதில்
125. பிறக்கும் பொழுது குழந்தையின் சராசரி எடை - 3.0 கிலோ
126. முன்பருவ கல்வி வயது என்பது - 3 - 5 வயது.
127. மனித வாழ்க்கையின் காலகட்டத்தின் முதல் வளர்ச்சிசார் பருவம் - குழவிப் பருவம்.
128. 'தலைமுறை இடைவெளி' எந்தப்பருவனத்தினருக்குரிய பிரச்சனையாகும் - பின் குமரப்பருவம்.
129. குமரப் பருவம் புயலும், அலையும் நிறைந்த பருவம் எனக் கூறியவர் - ஸ்டான்லி ஹால்
130. தனிமனித வேறுபாட்டின் முக்கிய காரணிகள் - மரபு, சூழ்நிலைகள்.
131. எந்த வயதில் ஒர் குழந்தையானது பாட்டி மற்றும் அம்மா இவர்களிடையே வேறுபாடு காண்கிறது - 12வது மாதத்தில்.
132. வளர்ச்சி நிலையில் மிக முக்கியமான பருவம் குமரப் பருவம். ஏனெனில் மனக்குமறலும் கொந்தளிப்பும் நிறைந்த பருவம்.
133. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழும் வளர்ச்சிக்கும் நடத்தைக்கும் காரணமாக அமைவது - சூழ்நிலை.
134. பிறந்த பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வுளவு - 144
135 பிறந்த ஆண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வுளவு - 130
136. மூன்று வயதில் ஆண் குழந்தைக்கு நாடித் துடிப்பு - 95
137. மூன்று வயதில் பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு - 90
138. உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எந்தப் பருவத்தினர் - முன் குமரப் பருவம்.
139. கல்லூரிக் கல்வி கற்பவர்கள் எந்தப் பருவத்தினர் - பின் குமரப் பருவம்.
140. முடியரசுக் கொள்கை என அழைக்கப்படுவது எது - ஒற்றைக் காரணி நுண்ணறிவுக் கோட்பாடு.
141. சிறப்பியலல்பு மாணவர்களை எதன் அடிப்படையில் வகைப்படுத்துகிறோம் - நுண்ணறிவு ஈவு
142. ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மைப் பெற்று மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுக் காணப்படுவதற்குப் பெயர் - தனியாள் வேற்றுமை
143. தொடர்ச்சியாக ஏற்படும் மாற்றங்கள் ஒழுங்கான முறையில் முதிர்ச்சியை நோக்கி ஏற்படும் மாற்றங்கள் என்று கூறியவர் - ஹார்லாக்
144. ஜூக்ஸ் குடும்பங்களை ஆராய்ச்சி செய்தவர் - டக்டேல்.
145. காலிகொக் குடும்பங்களை ஆராய்ச்சி செய்தவர் - கட்டார்டு
146. பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாட்டினை எந்த உளவியல் அறிஞரின் அறிதல் திறன் வளர்ச்சி கோட்பாட்டுடன் ஒப்பிடலாம் - பூரூணர்
147. சூழ்நிலைக்கு மற்றொரு பெயர் - செயற்கை.
148. மரபுக்கு மற்றொரு பெயர் - இயற்கை
149. பிறவிலேயே தோன்றும் மனவெழுச்சி - அச்சம்.
150. குமரப் பருவம் மனித வாழ்க்கையில் ஆரம்ப நிலையின் தொகுப்பு ஆகும் - ராஸ்
151. ஏன்? ஏதற்கு? எப்படி? என்ற கேள்விகள் எந்தப் பருவத்தில் ஏற்படுகின்றன - குழவிப் பருவம்.
152. ஒர் குழந்தை தன் தாயை எத்தனை மாதங்களுக்கு பின்னர் அடையாளம் கண்டு சிரிக்கும் - 3 - 4 மாதங்கள்.
153. பொதுவாக ஆண் குழந்தை பெண் குழந்தையை விட சற்று உயரமாகவும், கனமாகவும் இருக்கும். இது எந்த பருவத்தில் - பிள்ளைப் பருவம்
154. ஒர் ஆசிரியர் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டிய பருவம் எது - குழவிப் பருவம்.
155. உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டை விதிட்டவர் - பிராய்டு
156. பார்வைத்திறன், கற்றல், மனத்திருத்தல் போன்றவற்றில் உளவியில் சோதனைகள் மூலம் அளவிட்டவ்ர் - கேட்டில்
157. புள்ளியியல் அடிப்படையில் தனிநபர் வேறுபாடுகளை அளவிட்டவர் - சர் பிரான்சிஸ் கால்டன்.
158. ஜெர்மனியிலுள்ள லீட்சிக் என்ற இடத்தில் முதல் ஆய்வுக் கூடத்தை நிறுவியவர் - வில்லியம் வுண்ட்
159. உள இயற்பியல் நூலினை எழுதியவர் - ஜி.டி. பிரான்சர்
160. உளவியல் பரிசோதனைக்கு விதிட்டவர் - இ.எச். வெபர்
161. வளமளிக்கும் திட்டம் யாருக்காக அறிமுகப்பட்டது - கற்றலில் பின்தங்கிய சிறுவர்களுக்காக.
162. வலிவூட்டல் என்பது ஒரு - தூண்டுகோல்
163. கல்வி கற்பித்தலில் உபகரண நிலையினை அறிமுகப்படுத்தியவர் - ஸ்கின்னர்.
164. கற்றலிலன் மாறுதலில் கருத்தியல் கொள்ளை என்பதனை எடுத்துரைத்தவர் - வில்லியம் ஜேம்ஸ்
165. அனைத்து மாந்தர்களையும் அவரவர் உடலமைப்புக் கேற்றவாறு குறிப்பிட்ட உயிரினங்களாக வரிசைப்படுத்தியவர் - ஷெல்ட்ன்
166. நடத்தை சிகிச்சையின் வேர்களை ஊன்றிருப்பது - இயல்புணர்வு கற்றல் கருதுகோள்.
167. அறிவுரை பகர்தல் வகைகளில் எவ்வகை அறிவுரை பகர்தலில் அறிவுரை வழங்குபவர் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார் - சாதாரண அறிவுரை பகர்தல்
168. கோஹலரின் கூற்றுப்படி கல்வி என்பது - தொடர்ச்சியான நடைமுறை.
169. விடலைப் பருவத்திற்குத் தேவைப்படுவது - வாழ்க்கை குறிக்கோள் வழிக்காட்டல்
170. வழிகாட்டுதலின் நோக்கங்களை எடுத்துரைத்தவர் - ஆன்டர்சன்
171. தன்நிறைவு தேவைக் கொள்கையை எடுத்துரைத்தவர் - மாஸ்கோவ்
172. ஆக்கத்திறன் என்பது விரி சிந்தனை
173. நுண்ணியலைக் கற்பித்தல் என்பது - பயிற்சி நுட்பம்
174. கற்றலில் குறைபாடு உடைய குழந்தைகள் எத்திறனில் குறைந்து காணப்படுவர் - படித்தல்
175. பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின் மன வளர்ச்சி பற்றியது.
176. குறுகிய நேரத்தில் ஒருவன் தன் நினைவில் கொள்ளும் பொருட்களின் எண்ணிக்கை விளக்குவது - கவன வீச்சு
177. கல்வி என்பது - வெளிக் கொண்டது (to bring out)
178. எட்கர்டேலின் அனுபவ வடிவம் - கூம்பு
179. ஒரு தனிநபரின் முழுமையான நடத்தை தானே ஆளுமை என்று கூறியவர் - ஆல்பர்ட்
180. பரிசோதனை முறைக்கு உட்படாத அடிப்படைக் கொள்கை - எதிர்மறைக் கொள்கை
181. வரிசை முறைப்படி உள்ள எண்களின் பெருக்கல் முறையை மேம்படுத்தியவர் - பிஷ்ஷர்
182. உள் மதிப்பீட்டு முறைக்கு பொருத்தமில்லாதது - பரிசோதனை அட்டவணை
183. ஆளுமையை மதிப்புக் கொள்கையின் அடிப்படையில் விவரித்தவர் - ஸ்பராங்கர்
184. பெர்சனோ என்பதன் பொருள் - முகமூடி உடையவர்.
185. குழந்தை வளர்ச்சியில் பாலுணர்ச்சி போன்ற உடல் தேவை நிறைவுகளை விட சமூகப்பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தவர் - எரிக்சன்
186. குழந்தைகள் சிந்திக்கும் முறைகள் பெரியவர்கள் சிந்திக்கும் முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபடும் என்று கூறிய உளவியலறிஞர் - பியாஜே
187. இயக்கம் - மொழி - ஆயத்த நிலை இவற்றில் கவனத்தை தீர்மானிக்கும் காரணி - இயக்கம் மற்றும் ஆயத்த நிலை
188. ஒருவனது நுண்ணறிவு முதிர்ச்சி நிலையைக் குறிப்பது - மன வயது
189. செயல்மையக் கல்வி ஏற்பாடு யாருடைய கோட்பாட்டின் கல்வி விளைவு ஆகும் - பியாஜே
190. அறிவின் வாயில்கள் எனப்படுபவை - புலன் உறுப்புகள்
191. வெள்ளைத்துணியில் துளி அளவு கருப்புமை நன்கு புலப்படுகிறது - இதில் கவனத் தொடர்பான காரணி - புதுமை
192. மீத்திறன் பெறஅறக் குழந்தைகளின் நுண்ணறிவு ஈவு - 130 -க்கு மேல்
193. பெட்ரண்டு ரஸ்ஸலின் சமூக மேம்பாட்டிற்கான கணித சமன்பாடு - Y=f(X,D,M)
194. தார்ண்டைக்கிள் கற்றல் முறை - முயன்று தவறிக்கற்றல்.
195. குமரப்பருவப் பிரச்சனைகளில் ஒன்று - தலைமுறை இடைவெளி
196. தான் என்னும் உணர்வு மெல்ல மறைந்து நாம் உணர்வை குழந்தைப் பெறுவது - சமூகவியல்பு
197. அடைவு ஊக்கியின் அளவினை மதிப்பிடப் பயன்படும் ஆளூமைச் சோதனை - பொருளறிவோடு
198. மேம்பட்ட நினைவிற்கு வழி வகுப்பது - பல்புலன்வழிக்கற்றல்
199. ஜான் டூயியினது கல்விக்கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட கல்வி - வாழ்க்கை மையக் கல்வி
200. குறுகிய இடைவெளிகளைப் பூர்த்தி செய்து, காணும் பொருட்களை முழுமைப்படுத்திக் காணும் புலக்காட்சியமைப்பு விதி - மூட்ட விதி
201. பொருட்களின் இயல்புகள், மனிதனது செயலியக்கம் ஆகியவற்றின் இடைவினையினால் புலன் காட்சியின் தன்மை தீர்மானிக்கப்படுகிறது என விளக்கியவர்கள் - பியாஜே மற்றும் புரூனர்
202. உட்காட்சி வழிக்கற்றலை விளக்க கோஹலர் பயன்படுத்தியது - குரங்கு
203. தார்ண்டைக்கின் பயிற்சி விதி அலைவெண் விதி எனவும் அழைக்கப்படுகிறது.
204. வாகனங்களுக்கு நான்கு முதல் ஆறு வரையிலான எண்கள் தரப்படுவதன் உளவியல் காரணி - கவன வீச்சு
205. வழிக்காட்டுதல் கோட்பாடுகளில் பொறுத்தமற்ற ஒன்று - பிறழ்வு நிலையுடையோருக்கு மட்டும் தேவைப்படுவது.
206. ஸ்பியர்மென் கருத்துப்படி நுண்ணறிவு உள்ளடக்கியசு - பொதுக்காரணி G மற்றும் செயலுக்குரிய ஒரு சிறப்புக் காரணி S.
207. தெற்றுதல், திக்குதல் போன்ற மொழிப்பேச்சு குறைபாடுகளை எவ்வாறு நீக்கலாம் - தொடர் பயிற்சி மூலமாகவும், மருத்துவ உதவி மூலமாகவும்.
208. நடமாடும் கேள்விக்குறிகள் என உளவியலறிஞர் குரிப்பிடுவது - பிள்ளைப்பருவத்தினர்.
209. A,B என்ற குழந்தைகளின் மன வயது, காலவயது முறையே 8,6 மற்றும் 6,8 எனில் அக்குவந்தைகளின் நுண்ணறிவு ஈவு தொடர்பான சரியான கருத்து - A-யின் நுண்ணறிவு ஈவு B-யை விட அதிகம்
210. உளவியலறிஞர்கள் நுண்ணறிவு வளர்ச்சி முழுமைப் பெற்று விடுகிறது எனக்குறிப்பிடும் அதிகபட்ச வயது - 16
211. வளர்ச்சிப் பருவத்தில் தோன்றும் அறிதிறன் செய்பாட்டுக் குறைபாடு காரணமாக நடத்தையில் பின்தங்கியிருக்கும் குழந்தைகள் - மனவளர்ச்சி குன்றியோர்
212. ஆளுமையை அளவிடும் முறைகள் - வினா வரிசை முறை, தர அளவுகோல் முறை, புறத்தேற்று நுண்முறை
213. கிராமத்திலிருந்து குடும்பத்தைப் பிரிந்து நகரத்திற்கு கல்வி பயில செல்லும் மாணவனுக்கு ஏற்படுவது - மனப்போராட்டம்
214.குறிப்பிட்ட மனவெழுச்சி இயல்பான தொடர்புடைய பொருளிலிருந்து விலகி, முற்றிலும் தொடர்பில்லாத வேறொரு பொருளின் பால் செலுத்தப்படுதலைக் குறிப்பது - இடமாற்றம்
215. தொடக்கக் கல்வி நிலையில் மாணவர்களைக் குழுக்ளாகப் பிரிக்க பயன்படும் அளவுக்கோல் - செய்வினைத்திறன்கள், நுண்ணறிவு, சிறப்பு நாட்டங்கள்
216. மந்த புத்தியுள்ளோரின் நுண்ணறிவு வளர்ச்சி எந்த வயதில் நின்று போகக்கூடும் - 10 - 12 வயதில்
217. குழந்தை, ஒரு பொருளைப் பற்றி மன பிம்பங்கலைப் பயன்படுத்தி சிந்திக்கும் நிலை - உருவக நிலை
218. குழந்தையின் மொழி வளர்ச்சியைப் பாதிக்கும் காரணி - உடல் நலக்குறைவு, நுண்ணறிவு, இரு மொழி வுழங்கும் குடும்பம்.
219. ஒரு தூண்டலை வழங்குவதன் விளைவாக, ஒரு குறிப்பிட்ட துலங்கல் திரும்பத்திரும்ப தோன்றுவதற்கான வாய்ப்பு அதிகரித்தால். அத்தூண்டல் - வலுவேற்றி
220. நடத்தை மாற்றக் கோட்பாடு அடிப்படையில் கற்றலுக்கு மூன்று வெளிக்கட்டுப்பாடுகள் அவசியம் எனக்கூறியவர் - ஸ்கின்னர்.
221. பாவ்லாவின் கற்றல் பரிசோதனையில் பயன்படுத்தப்பட்டது - நாய்
222. சிரித்தல், ஒலிகளை எழுப்புதல், சைகைகள் மூலம் சிறு குழந்தைகள் தங்கள் தேவைகளை பிறருக்கு தெரிவிக்க முற்படுவது - பேச்சுக்கு முந்தையநிலை
223. கற்றலின் இயல்பு சாராத கருத்து - கற்றல் சிறப்பு பொருந்திய உயிரிகளிடம் மட்டுமே காணப்படும்.
224. உணர்வுகள் மேலோங்கி நிற்கும் நனவு நிலை - மன எழுச்சி
225. மனவெழுச்சிகளை அறிவு, உணர்வு, உடலியக்கம் என்ற மூன்று இயல்பூக்க நடத்தைக் கூறுகளால் விளக்கியவர் - மக்டூகல்
226. பியாஜேயின் அறிதல் வளர்ச்சி கோட்பாட்டின்படி முன்பின் மாற்றங்களை குழந்தை நன்கு உணர முடியும் நிலை - பருப்பொருள் நிலை
227. ஒழுக்க வளர்ச்சியில் உளவியலாளர்கள் குறிப்பிடும் நிலைகள் - 4
228. குழந்தையின் தற்கருத்தினை பாதிப்பவை - மரபுக் காரணிகள், குழந்தை மீதான குடும்ப செல்வாக்கு, புறச்சூழ்நிலைகள்.
229. கற்றலின் விளைவாக ஒருவன் பெறும் இணக்கமான இசைவு பெற்ற உடலியக்க செயல்களை எவ்வாறு அழைப்பர் - செய்திறன்கள்
230. குழந்தையின் வாழ்க்கையில் குடும்பம் ஒரு - ஆதாரக்குழு
231. விரைவுக் கல்வித்திட்டம் வளமைக் கல்வித்திட்டம் எந்த குழந்தைகளுக்காக பரிந்துரைக்கப்பட்டவை - மீத்திறன் குழந்தைகள்
232. மனவெழுச்சி சிக்கலில் ஒன்று - இருமுகப் போக்கு
233. பிள்ளைப் பருவத்தினரை இவ்வாறும் அழைப்பதுண்டு - உயிருள்ள கேள்விக்குறிகள்
234. புலன் உணர்ச்சிகளால் தூண்டப்படும் மன எழுச்சிகள் முறையே அன்பு மற்றும் பொறாமை
235. வளர்ச்சியின் காரணமாக முன்னேற்றம் நிகழலாம் அல்லது நிகழாமலும் போகலாம்.
236. எல்லாப் பருவத்திலும் வளர்ச்சி விகிதம் ஒரே சீராக அமைவதில்லை.
237. செயல்படு ஆக்க நிலையிறுத்தம் ஸ்கின்னரால் துலங்கல் சார் ஆக்க நிலைநிறுத்தம் என அழைக்கப்பட்டது.
238. ஒரு குழந்தை தனது பொம்மையை குளிப்பாட்டி, பாலூட்டி உறங்கச் செய்வது போல் நடந்து கொள்வது மன வளர்ச்சியின் செயலுக்கு முற்பட்ட நிலை
239. அச்சம் என்பது ஒரு - அடிப்படை மன எழுச்சி
240. மகிழ்ச்சியற்ற சுற்றுப்புறம், நண்பர்கள் இல்லாத முன் பிள்ளைப் பருவக் குழந்தைகளின் பிரச்சனை - தாழ்மை உணர்வு
241. உளத் தடுமாற்றங்களால் பீடிக்கப்பட்டவர்களின் நடத்தைகளை விவரிக்கும் உளவியல் பிரிவு - நெறிபிறழ் உளவியல்
242. கவனித்தலை தீர்மானிக்கும் புதுமை ஒரு - புறக்காரணி
243. புலன்காட்சியைத் தோற்றுவித்த ஒரு பொருள் இன்றியே அப்பொருள் பற்றி உணர்தல் - சாயல்
244. ஒப்பார்குழு ஆதிக்கம் தலைதூக்கி நிற்கும் பருவம் - குமரப்பருவம்
245. ஃப்ராய்டு மன பாலூக்க ஆளுமை வளர்ச்சியை 5 படிநிலைகளாக விளக்குகிறார்.
246. நினைவு கூர்தலின் முதல் நிலையாகக் கருதப்படுவது - கற்றல்
246. பின்னர் கற்றலானது முன்பு கற்றதை மறத்தல் இதற்கு என்ன பெயர் - பின்னோக்கத் தடை
247. முன்பு கற்றவை பின்னர் கற்றதை மறத்தல் இதற்கு என்ன பெயர் - முன்னோக்கத் தடை
248. டேசிஸ்டாஸ் கோப் என்னும் கருவி எதனை அளவிடப் பயன்படுகிறது - கவன வீச்சு
249. மறதிக்குக் காரணியாக அமைவது - அச்சம்
250. மறதிக்கு அடிப்படையான காரணம் - பயன்படுத்தாமை
251. ஒரே பாடத்தை நீண்ட நேரம் ஒரே கற்பித்தல் முறையில் கற்பிக்கும்போது மாணவர்களுக்கு ஏற்படுவது - சலிப்பு
252. ஒரே பாடத்தை நீண்ட நேரம் பல்வேறு கற்பித்தல் முறையில் கற்பிக்கும்போது மாணவர்களுக்கு ஏற்படுவது - மகிழ்ச்சி
253. நினைவு கூர்தலின் இறுதி நிலையாகக் கருதப்படுவது - மீட்டுக் கொணர்தல்
254. கற்றல், மனதிலிருத்தல், மீட்டறிதல், மீட்டுக் கொணர்தல் ஆகிய படிகளைக் கொண்டது - நினைவு
255. பழைய கற்றலானது புதிய கற்றலுக்கு உதவுவது - பயிற்சி மாற்றம்
256. பயிற்சி மாற்றக் கோட்பாடான பொதுவிதிக் கோட்பாட்டை உருவாக்கியவர் - ஜட்
257. பயிற்சி மாற்றக் கோட்பாடான உளப்பயிற்சி கோட்பாட்டை உருவாக்கியவர் - வில்லியம் ஜேம்ஸ்
258. முதலில் கற்ற செயல் புதிய செயலை கற்பதற்கு உதவி செய்தால் அந்த பயிற்சி மாற்றத்திற்கு பெயர் - நேர் பயிற்சி மாற்றம்.
259. முதலில் கற்ற செயல் புதிய செயலைக் கற்பதற்கு தடையாக இருந்தால் அந்த பயிற்சி மாற்றத்திற்கு பெயர் - எதிர் பயிற்சி மாற்றம்
260. முதலில் கற்ற செயலானது ஒர் புதிய செயலைக் கற்பதற்கு உதவாமலோ அல்லது தடையாக இல்லாமலோ இருந்தால் அந்தப் பயிற்சி மாற்றத்திர்கு பெயர் - பூஜ்ய பயிற்சிய மாற்றம்
261. மனதில் இருத்தியதை வெளியே ஒர் தூண்டுதலாய்த் தெரியும் பொழுது அதை அடையாளம் கண்டு கொள்வது - மீட்டறிதல்
262. கற்றவற்றை நமக்குத் தேவைப்படும் வரை மனதில் வைக்கப்படும் நினைவின் பகுதி - மனத்திலிருத்தல்
263. குறுக்கீடுக் கொள்கை எதனுடன் தொடர்புடையது - மறதி.
264. மறதி வளைவுப் பரிசோதனையை அளித்தவர் - எபிங்காஸ்
265. கற்றலுக்கு ஊக்கம் இல்லாமலிருந்தால் கற்பவர் தேர்ச்சியடைவதில்லை இதற்கு என்ன பெயர் - ஊக்கு வித்தல் எல்லை
266. மாணவர்களின் குறிக்கோள் எளிதாக அடையக் கூடியதாக இருந்தால் அந்த மாணவர் ஆர்வத்தையும் ஊக்கத்தையும் இழந்து விடுவார் இதற்கு என்ன பொருள் - உளவியல் எல்லை
267. ஒருவன் கற்றலில் தேவையான முன்னேற்றத்தை அடைந்த பொழுது மேற்கொண்டு எத்தகைய முன்னேற்றமும் இருக்காது இதற்கு என்ன பெயர் - அறிவு எல்லை
268. பயிற்சியில் முன்னேற்றமில்லாதபொழுது கற்றல் நிகழ்வு நிலையாக உள்ளது இதற்கு என்ன பெயர் - தேக்க நிலை
269.பயிற்சி மாற்றக் கோட்பாடன குறிக்கோள் கோட்பாட்டை உருவாக்கியவர் - பாக்லி
270. ஒரு கற்றல் வரைபடத்தில் கற்றலின் வளர்ச்சி ஒரே விகிதத்தில் இருக்கிறது இதன் பொருள் - பூஜ்ஜய முன்னேற்றம்
271. கற்றல் வரைபடத்தில் கற்றலின் வளைவின் தட்டையான பகுதிக்கு என்ன பொருள் - தேக்க நிலை
272. கற்றல் வரைபடத்தில் கற்றல் தொடக்கத்தில் குறைவாகவும் பின்னர் பயிற்சியினால் அதிகமாக இருப்பதையும் குறுக்கின்றது - இதற்கு என்ன பொருள் - நேர் மறை முன்னேற்றம்
273. ஒரு கற்றல் வரைபடத்தில் கற்றல் தொடக்கத்தில் வேகமாக நிகழ்த்தும் பின்னர் பயிற்சியினால் மெதுவாக நிகழ்கிறது இதற்கு என்ன பொருள் - எதிர்மறை முன்னேற்றம்.
274. வயதுகேற்ற முறையில் நுண்ணறிவுச் சோதனையை அமைத்தவர் - பினே - சைமன்.
275. மனவயதுக்கும் கால வயதுக்கும் இடையே உள்ள தொடர்பு - நுண்ணறிவு ஈவு
மேலும்...........
மேலும்...........
1. கனவுகள் ஆய்வு என்ற நூலை எழுதியவர் - சிக்மண்ட் பிராய்ட்
2. குழந்தையின் பல்வேறு பருவங்களில் ஏற்படும் வளர்ச்சி மாற்றங்களை ஆராயும் உளவியலின் பிரிவு - பருவ வளர்ச்சி உளவியல்
3.ஒருவனது உள்ளத்திலுள்ளவற்றை அவன் விருப்பு, வெறுப்பின்றி ஆராய்ந்து விவரித்தாலும், அவ்வாறு விவரிக்கப்பட்டவற்றைப் பகுத்தாய்ந்து வகைப்படுத்தலும் அகநோக்கு முறையாகும் என்று கூறியவர் - வண்ட்டு
4. மனிதர்கள் மேற்கொள்ளும் தற்காப்பு நடத்தைகள் - 60
5. டாரன்சு கூறிய ஆக்கத் திறன் பண்புகள் - 5
6. ஆக்கத் திறன் அடிப்படையில் சிக்கல் தீர்க்கும் முறையில் ஆஸ்போர்ஸ் உருவாக்கிய படிகள் - 5
7. மெதுவாக கற்போரின் நுண்ணறிவு ஈவு - 70 முதல் 90
8. ஒரு கரு இரட்டையர்கள் ஒரே சூழலில் வளர்ந்தால் அவர்களின் நுண்ணறிவு ஈவு - 87
9. கற்றலில் கற்றலினை விளக்கியவர் - வெர்திமர்
10. பொருத்தப்பாடு வாழ்க்கையின் அடிப்படை என்று கூறியவர் - ஹெட்பார்டு
11. கற்பதற்கான 5 படிகளை அறிமுகப்படுத்தியவர் - ஹெட்பார்டு
12. குமில் என்ற நூலை எழுதியவர் - ரூசோ
13. தனியாள் நுண்ணறிவு சோதனை மூலம் மீத்திறன் உடைய மாணாக்கர்களின் நுண்ணறிவு ஈவு - 140
14. டெர்மன் தனது சோதனைக்கு மீத் திறன் உடைய மாணாக்கர்களின் எண்ணிக்கை - 1508
15. டெர்மன் நுண்ணறிவு சோதனை மூலம் மீத் திறன் உடைய மாணாக்கர்களின் நுண்ணறிவு ஈவு - 140
16. உயர் அறிவாண்மை உள்ள குழந்தைகள் தங்களிடம் உள்ள 3 உயர் திறமைகள் மூலம் தங்களுக்கும், சமுதாயத்திற்கும் பயனுள்ள செயல்களை செய்கின்றனர் என்று கூறியவர் - தென்சாலி
17. குற்றம் புரியும் பண்பும், பாரம்பரியம் என்ற ஆய்வு செய்த உளவியல் வல்லுநர் - கார்ல்பியர்சன்
18. புலன் இயக்கப்பருவம் என்பது - 0-2 ஆண்டுகள்.
19. நுண்ணறிவு என்பது தொடர்ச்சியாக வளர்ச்சியடையும் ஓர் ஆற்றல் என்று கூறியவர் - பீனே.
20. ஏபிஎல் என்பது - செயல் வழிக்கற்றல்
21.தொடக்கக் கல்வி பயில வரும் போது குழந்தைகளின் நரம்பு மண்டலம் - 90% வளர்ச்சியடைந்து வருகிறது.
22. உளவியல் சோதனை ஆய்வகத்தை முதன் முதலில் நிறுவியவர் - முதல்வர் லைர்.
23. பெஞ்சமின் புளும் பிரித்த அறிவு சார் எண்ணிக்கை - 6
24. பிறக்கும் குழந்தையின் மூளையின் எடை சுமார் 350 கிராம்.
25. பிறக்கும் குழந்தையின் உயரம் சுமார் 52 செ.மீ.
26. ஆளுமை வளர்ச்சியில் 8 நிலைகள் உள்ளன என்று கூறியவர் - எரிக்சன்
27. ஆய்வில் காணப்படும் பல்வேறு படிகளை உருவாக்கியவர் - ஜான்ரூயி
28. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எல்லோரையும் ஈர்ப்பது - விளம்பரங்கள்
29. நுண்ணறிவு சோதனை ஏழு வகையான அடிப்படை மனத் திறன்களை உடையது என்று கூறியவர் - தர்ஸ்டன்
30. பிறருடைய எண்ணங்களையும், கருத்துக்களையும் நம்மை அறியாமலேயே ஏற்றுக் கொள்ளுதல் - கருத்தோற்றம்
31.குழந்தைகளின் உள மருத்துவ விடுதி முதன் முதலில் நிறுவப்பட்ட இடம் - சிகாகோ
32. கெஸ்டால்ட் கொள்கையை பின்பற்றி தார்ண்னடக்கின் விதி - உடைமை விதி
33. கற்றலின் தேக்க நிலை - பிளாட்டோ
34. மனவளம் குன்றிய குழந்தைகளின் நுண்ணறிவு ஈவு - 80க்கும் கீழ்
35. அருவாண்மைச் சோதனைகளில் மிக குறைவான நுண்ணறிவு ஈவு பெறுபவர்கள் - மனவளம் குன்றிய குழந்தைகள்
36. வகுப்பில் பிற்பட்டக் குழந்தைகளாக கருதப்படுபவர்களின் சதவீதம் 8 முதல் 10%
37. வகுப்பில் உயர் அறிவான்மைக் குழந்தைகளின் சதவீதம் 3 முதல் 5%
38. திருடுதல் என்பது - நெறிபிறழ் நடத்தை
39. பதட்டம் என்பது - மிதமான மனநோய்
40. மனச்சிதைவு என்பது - தீவிரமான மன நோய்
41. பொய்ப் பேசுதல் என்பது - பிரச்சனை நடத்தை
42. ஒழுக்கமின்மை என்பது - பிரச்சனை நடத்தை
43. ஆங்கிலத்தில் நடத்தையென்பதினை குறிக்கும் குறிப்பெழுத்துகள் - S --> R
44. சி.எஸ். மையர்ஸ் வலியுறுத்துவது - நளமுறை உளவியல்
45. கற்பித்தல் சிக்கலை குறைத்து, கற்பித்தல் நிலையினை சுருக்குவது - நுண்நிலைக் கற்பித்தல்
46. மனித வளர்ச்சி = மரபு நிலை x சூழ்நிலை
47. தூண்டலுக்கும் துலங்கலுக்கும் இடையே காணப்படும் இடைவெளி 0,03 விநாடி
48. பரம்பரையாக வரும் மரபு நிலை - உயிரியல் மரபு நிலை
49. செயல் தொடர் ஆராய்ச்சியினை முதன் முதலில் வலியுறுத்தியவர் - ஸ்டீபன் எம். கோரி
50. அக நோக்கு முறையைப் பற்றி விவரித்தவர் - இ.பி. டிட்சனர்.
மேலும்..........
1. கற்றலின் முக்கிய காரணி ஒன்று - கவர்ச்சி
மேலும்..........
1. உயர் அறிவாண்மை குழந்தைகளிடம் காணப்படும் உயர்திறமைகள் - உயர் அறிவாண்மை, உயர் செயலாக்கம், உயர் ஆக்கத்திறன்.
2.மாணவர்கள் கற்கும் வேகத்திற்கு வழங்கப்படும் நூல்கள் நிரல் வழிக் கற்றல் நூல்கள்.
3. தனியாள் வேறுபாட்டிற்கு காரணமாக இருப்பது - மரபு மற்றும் சூழ்நிலை
4. தனியார் வேறுபாடுகள் ஆறு பரப்புகளில் காணப்படுகிறது என்று கூறியவர் - டைலர்.
5. மாணவர்களின் சமூகப் பண்புகளை வளர்ப்பதற்கு உதவுவன - அறிவு வளர்ச்சி, ஒழுக்க வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி.
6. மாணவர்களிடம் மனநலத்தை வளர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் - இலக்கிய மன்றம் நடத்துதல், கல்வி சுற்றுலா மற்றும் போட்டிகள் நடத்துதல், சாரணர் இயக்கம் போன்றவற்றில் பங்கு கொள்ள செய்வது
7. சரியான இலக்குகளை முடிவு எடுக்க முடியாத நிலையில் ஒருவருக்கு ஏற்படும் போராட்டம் - மனப்போராட்டம்.
8. ஆக்கச் சிந்தனையில் நான்காவது படி - சரி பார்த்தல்.
9. ஆளுமையின் வகைகள் - இரண்டு
10. ஆளுமைக் கூறுகளின் வகைப்பாட்டினை கூறியவர் - ஐஸென்க்
11. ஆளுமையைத் தோற்றுவிக்கும் காரணிகள் - இரண்டும்.
12. ஆளுமையை தோற்றுவிக்கும் காரணிகள் - உயிரியல் காரணிகள், சமூகவியல் காரணிகள், உளவியல் காரணிகள்
13. மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் தரும் என்று கூறியவர் - திருவள்ளுவர்.
14. ஆளுமை என்பது ஒருவரது பண்புகளின் தனித்தன்மை வாய்ந்த அமைப்பு என்று கூறியவர் - கில்போர்டு
15. ஆளுமை என்பது மனிதர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்வார்கள் என்பதை முன்கூட்டியே அறிய உதவுவது - கேட்டல்.
16. மனிதர்கள் தங்களின் சூழ்நிலைக்கேற்ப ஏற்படுத்திக் கொண்ட பொருத்தப்பாடு, நிலையான பழக்கங்கள் இவற்றின் ஒருங்கிணைப்பே என்று கூறியவர் - கெம்ப்
17. மனநலம் என்பது மனநிறைவு, மனவெழுச்சி, முதிர்ச்சி, பொருத்தப்பாடு எனக் கூறுபவர்கள் - உளவியலறிஞர்கள்.
18. ஒரு மாணவன் பள்ளியில் பக்கத்து மாணவனின் புத்தகத்தை திருடுவது - பிரச்சினை நடத்தை.
19. சிறந்த மன நலன் உள்ள ஆசிரியர்களால் மட்டுமே - நல்ல மநிலை உள்ள மாணவனை உருவாக்க முடியும்.
20. மாணவர்களின் நுண்ணறிவு, ஆக்கத்திறன் போன்றவை - உள்ளார்ந்த ஆற்றல்கள்.
21. சமுதாயத்தில் சுருங்கிய இலட்சிய பதிப்பாக செயல்படுவது - பள்ளி
22. மனநலம் என்பது ஒருவனது ஆளுமையின் நிறைவான இசைவான செயற்பாட்டை குறிப்பது என்று கூறியவர் - ஹேட்பீல்டு
23. ஒருவரின் மனநலத்தை தீர்மானிக்கும் காரணிகள் - நான்கு
24. ஒருவர் நடத்தை பிறழ்ச்சிகள் ஏதுமின்றி, பிறரோடு இணைந்து போகும் தன்னிணக்கமே மன நலம் என்று கூறியவர் - மார்கன் கிங்
25. மனநலமுடையோரின் நடத்தைகள் யாவன?
26. வாழ்க்கையில் குறிக்கோள்களையும், இலட்சியங்களையும் பெற்றிருப்பவர், நுண்ணறிவும், சரியான முடிவுகளை மேற்கொள்பவர், நகைச்சுவை உணர்வு, தன்னம்பிக்கை மற்றும் சமூகப் பொருத்த பாட்டினை பெற்றிருப்பவர்.
27. ஒருவரது மனநலத்தை தீர்மானிப்பவை - மரவு வழிக் காரணிகள், உடல் நலக் காரணிகள், குழந்தைப் பருவத்தில் அடிப்படை தேவைகளில் திருப்தி.
28. தனக்கும் மற்றவர்களுக்கும் பயனும், மகிழ்ச்சியும் விளைகின்ற வாழ்க்கையில் எல்லா சூழலிலும் பொருத்தப்பாடு செய்து கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் - மனநலமுடையோர்.
29. உளவியலின் அடிப்படையில் மன நலம் என்பது - மனநிறைவு பெறுதல், மனவெழுசி, முதிர்ச்சி பெறுதல், சூழலுடன் பொருத்தம்பாடு செய்தல் போன்றவை.
30. ஒரு குறிக்கோளை அடைய முடியாமல் தடுக்கப்படும் போது மனசிதைவு ஏற்படுகிறது என்று கூறியவர் - மார்கன் கிங்
WHO IS WHO IN PSYCHOLOGY
1. வடிவமைப்புக் கோட்பாட்டை உருவாக்கியவர் - டிட்ச்னர் (Edward Bradford Titchener)
2. மானிட உளவியல் Humanistic Psychology - கார்ல் ரோஜர்ஸ், மாஸ்கோ
3. உளவியல் பரிசோசனைகள் - வெபர் (E.H.Weber)
4. உள இயற்பியல் (PSYCHOPHYSICS) - ஃபெச்சனர் (Gustav.T.Fechner)
5. முதல் உளவியல் ஆயாவகத்தை உருவாக்கியவர் - வல்கம் வுண்ட் Wilhelm Wundt
6. தனியாள் வேறுபாடுகளை அளவிட்டவர் - சர். பிரான்ஸிஸ் கால்டன், ஆர்.பி.காட்டல்
7. மருத்துவ உளவியல் முறைகள் - மெஸ்மர்
8. அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாடு (Congnitive Development) பியாஜே Jean Piaget, புரூணர் Jerome S.Bruner.
9. நுண்ணறிவுச் சோதனைகள் - பினே Alfred Binet, சைமன் Theodore Simon
10. கருவிசார் (அ) செயல்பாடு ஆக்காநிலையிறுத்தக் கற்றல் - ஸ்கின்னர் (B.F.Skinner)
11. மறைமுக அறிவுரைப் பகர்தல் (நெறி சாரா அறிவுரைப் பகர்தல் - கார்ல் ரோஜர்ஸ் (Carl .R. Rogers)
12. சமரச அறிவுரைப் பகர்தல் - F.C. தார்ன் F.C.Thorne
13. முழுமைக்காட்சிக் கோட்பாடு - கெஸ்டால்ட் Gestalt. இது ஒரு ஜெர்மன் சொல் உளவியல் அறிஞர் பெயர் அல்ல.
14. ஆக்க நிலையிறுத்தக் கற்றல் - பாவ்லவ் Irvan petrovich Pavlov
15. முயன்று தவறிக் கற்றல் - தார்ண்டைக்
16. நடத்தையியல் (Behaviourism) - வாட்சன், டோல்மன், ஸ்கின்னர், ஹப்
17. உந்தக் குறைப்புக் கற்றல் கோட்பாடு - ஹல்
18. உட்காட்சி மூலம் கற்றல் - கோலர்
19. நுண்ணறிவுச் சோதனையின் தந்தை - ஆல்பிரட் பீனே
20. நுண்ணறிவுச் கட்டமைப்பு கோட்பாடு - ஜே.பி.கில்போர்டு
21. நுண்ணறிவு படிநிலைக் கோட்பாடு - ஸிரில் பர்ட் - வெர்னன்
22. நுண்ணறிவு பலகாரணிக் கொள்கை - தார்ண்டைக்
23. நுண்ணறிவு குழுகைரணிக் கொள்கை - எல்.எல்.தார்ஸ்டன்
24. நுண்ணறிவு இரு காரணிக் கொள்கை - ஸ்பியர்மென் (Charles Spearman)
25. இயல்பூக்கக் கொள்கை - வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்
26. குறிக்கோள் கோட்பாடு - பாக்லி W.C.Bagley
27. பொதுமைப் படுத்தல் கோட்பாடு - ஜட்
28. ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக்
29. மறத்தல் சோதனை - எபிங்காஸ் - H.Ebbinhaus
30. மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்
31. அடைவூக்கம் - டேவிட் மெக்லிலெண்ட்
32. படிநிலைக் கற்றல் கோட்பாடு - காக்னே
33. களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை - குர்த் லெவின்
34. அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - டெம்போ(Dembo)
35. பார்வைத் திரிபுக் காட்சி - முல்லர், லயர்
36. முதன்மைக் கற்றல் விதிகள் - தார்ண்டைக்
37. நவீன உளவியலின் தந்தை - பிராய்டு
38. குமரப்பருவத்தினரின் பிரச்சனைகள் - ஸ்டான்லி ஹால்
39. கட்டுப்பாடற்ற இணைத்தறிச் சோதனை - யூங்
40. பொருளறிவோடு இணைத்தறிச் சோதனை - முர்ரே - மார்கன்.
41. மைத்தடச் சோதனை - ஹெர்மான் ரோர்சாக்
42. பகுப்பு உளவியல் - கார்ல் ஜி யூங்
43. தனி நபர் உளவியல் - ஆட்லர்
44. உளப்பகுப்புக் கோட்பாடு - சிக்மண்ட் பிராய்ட்
45. வளர்ச்சி ஆளுமைக் கொள்கை - சிக்மண்ட் பிராய்டு, ஆட்லர், யூங்
46. வகைப்பாடு - அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை - ஐசன்க்(H.J.Eysenck)
47. அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை - G.W.ஆல்போர்ட் , R.B.காட்டல்
48. வகைப்பாடு ஆளுமை கொள்கை - ஹிப்போக்ரைட்ஸ், கிரெட்சுமர், ஷெல்டன்.
49. மனப்பாண்மை அளவிடும் முறையை உருவாக்கியவர்கள் - தர்ஸ்டன், லிக்கர்ட்
50.தொழில் ஆர்வ மனப்பான்மை அளவுகோலை உருவாக்கியவர் - பிரெஸ்ஸி
51. தொழில் ஆர்வ பட்டியலை உருவாக்கியவர் - ஸ்டிராங்
52. தொழில் ஆர்வ வரிசைப் பதிவேட்டை உருவாக்கியவர் - கூடர் (G.F.Kuder)
54. இயல்பூக்கக் கொள்கை - வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்
55. படிநிலைத் தேவைகள் கோட்பாடு - மாஸ்லோ
56. அடவூக்கம் - டேவிட் மெக்லிலெண்ட்
57. மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்
58.மறத்தல் சோதனை - எபிங்காஸ்
59. ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக்
60. பொதுமைப் படுத்துதல் கோட்பாடு - ஜட்
61. குறிக்கோள் கோட்பாடு - பாக்லி
62. படிநிலைக் கற்றல் கோட்பாடு - காக்னே
63. குமரப் பருவனத்தினரின் பிரச்சனைகள் - ஸ்டான்லி ஹால்
64. நவீன உளவியலின் தந்தை - பிராய்டு
65. முதன்மைக் கற்றல் விதிகள் - தார்ண்டைக்
66. அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - டெம்போ
67. களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை -குர்த் லெவின்
இது தினமணியில் இருந்து எடுத்தாளப்பட்ட செய்தி மேலும் அறிய தினமணி வெப்சைட் காண இங்கே கிளிக் செய்யுங்கள்
NAPE என்பது என்ன? தேசிய வயது வந்தோர் கல்வித் திட்டம் 1978
அறிவொளி இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1990
Operation Enlightment என்பது என்ன - அறிவொளி இயக்கம்
சென்னையில் உயர்நிலைப்பள்ளி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1814
தமிழ்நாட்டுப் பாடநூல் எந்த வருடம் நிறுவப்பட்டது -1970
தமிழ்நாட்டில் 10, +2, +3 எந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது - 1978
1982ல் எம் ஜி இராமச்சந்திரன் கொண்டு வந்த முக்கியத் திட்டம் -முதலமைச்சர் சத்துணவுத் திட்டம்
14 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்பக்கல்வி அடிப்படை உரிமை என்பது இந்திய அரசியல் சாசனத்தின் எந்த பிரிவு - பிரிவு 21 -ஏ
புதுமையான சொற்களை எழுதும் பயிற்சி பற்றி குறிப்பிட்டவர் -மால்ட்ஸ் மேன்
“தொடக்கக் கல்வி ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாகும்” கூறியவர் - பேராசிரியர் அமர்த்தியா சென்
கல்விக்கான முக்கோண செயல்பாட்டைக் கூறியவர் - ரெடன்
“இந்தியாவில் இந்தியக் கல்வி இல்லை” கூறியவர் - டாக்டர் டி வெங்கிடசுப்பிரமணியம்
”எரியும் விளக்கே மற்றொரு விளக்கை எரிய உதவும் “ - தாகூர்
காசா டி பாமினி யாரால் நிறுவப்பட்டது - மரியா மாண்டிசோரி
முன்னோக்குத் தடையை ஆராய்ந்தவர்- ஆசபல், அண்டர்வுட்
பின்னோக்குத்தடையை ஆராய்ந்தவர் - முல்லர், பில்சக்கர்
கற்பித்தல் இயந்திரத்தளத்தின் முன்னோடி - பி எப் ஸ்கின்னர்
புறத்தேற்று நுண்முறை என்பது - ஊடுகதிர் நிழற்படம் மூலம்
“வகுப்பறை பணியறை போல் இருக்க வேண்டும்” கூறியவர் -ஜான்டூயி
மேலாண்மை பற்றி கூறுபவர்- ஆல்பர்ஸ்
வேக்ஸ்லர் என்பவர் உருவாக்கிய நுண்ணறிவுச் சோதனை எதனைக்கணக்கிடப் பயன்படுகிறது - விலக்கல்
ஜான்டூயி கொள்கை - பயனளவைக் கொள்கை
பார்வையற்றோருக்கான எழுத்துமுறையை உருவாக்கியவர் -ப்ரெய்ல்
அறிவுப்புல வரைப்படம் எனும் கருத்தைக் கூறியவர்- டோல்மன்
நிறையாளுமையை உருவாக்கியவர்- ஹர்லாக்
அறிவாண்மை ஈவு சொல்லை முதன்முதலாகப் பயன்படுத்தியவர் -டெர்மன்
"Gifted" என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர்- விப்பிள்
L.O.E என்பது - வாழ்க்கை மையக் கல்வி
கற்றலைப் பாதிக்கும் முக்கியமான காரணி - மறத்தல்
வயது வந்தோர் கல்வித்திட்டம் என்பது - 15 வயது முதல் 35 வயதுவரை
தற்கால வடிவியலின் தந்தை - யக்லிட்
இந்தியாவில் முதல் எழுத்தறிவு பெற்ற மாவட்டம் - கோட்டயம்
+2 நிலையிலேயே மாணவர்களுக்கு IAS, IPSபயிற்சி கொடுக்க வேண்டும் என்றவர் - L.K.ஜா
நுண்ணறிவு என்ற சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தியவர் -சிசரோ
நுண்ணறிவு 16 வயதில் முழுமையடையும் எனக் கூறியவர் - மெரில்
"அக்னிச் சிறகுகள்" என்ற நூலின் ஆசிரியர் - விஞ்ஞானி அப்துல் கலாம்
"போரும் அமைதியும்" என்ற நூலை எழுதியவர் - டால்ஸ்டாய்
"மை ஸ்ட்ரகில்ஸ்" என்ற நூலை எழுதியவர் - ஈ கே நாயனார்
"ஞானரதம்" என்ற நூலை எழுதியவர் - பாரதியார்.
"குருவின் காலடியில்" என்ற நூலை எழுதியவர் - ஜே கிருஷ்ணமூர்த்தி
ஜெ. எச்.பெஸ்டாலஜி என்ற நூலை எழுதியவர் - "லியோனார்டும் கெர்டரூடும்"
“Adul Learning" என்ற நூலை எழுதியவர் - டாக்டர் ஆர் ஜெயகோபால்
"நாளைய பள்ளிகள்" என்ற நூலை எழுதியவர் - ஜான்டூயி
" A Journal of Father" என்ற நூலை எழுதியவர் - பெஸ்டாலஜி
"ஸ்டைர்” என்ற நூலை எழுதியவர் - விக்டர் ஹீயூகோ
புள்ளியியலின் தந்தை - சர் ரொனால்டு ஏ பிஸ்ஸர்
உதவிக்கல்வி அலுவலர் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார் -நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிஉயர்வு, நேரடி நியமனம்
ஆசிரியர் நியமனத்தில் பணி வரன் எப்போது செய்யப்படும் - 1 வருடத்தில்
ஆசிரியர் நியமனத்தில் தகுதிகாண் பருவம் என்பது - 2 வருடத்தில்
ஆசிரியர் நியமனத்தில் தேர்வு நிலை எப்போது செய்யப்படும் - 10 வருடத்தில்
ஆசிரியர் பணியில் சிறப்பு தேர்வு நிலை என்பது - 20 ஆண்டுகள்
விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களின் பள்ளி ஆசிரியர் - திரு அய்யாதுரை சாலமன்
உலக் கிராமம் என்ற கோட்பாட்டினைக் கூறியவர் - மார்ஷல் மெக்ளுகன்
ஒரு உயர்நிலைப்பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச நிலப்பரப்பு எவ்வளவு - 4 ஏக்கர்
சிசுபவன் என்பது - நர்சரி பள்ளி
ஒரு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவனுக்கு தேவையான நிலப்பரப்பு - 0.88 ச.மீ
வால்டாரப் பள்ளியை தோற்றுவித்தவர் - ருடால்ப் ஸ்டெனர்
பாத்பவன் என்பது - உயர்நிலைப்பள்ளி
சைனிக் பள்ளிகள் இந்தியாவில் எத்தனை - 17
SS யுனிவர்ஸ் கப்பலில் அமெரிக்க நாட்டின் எத்தனை மாணவர்கள் சென்னை வந்தனர் - 461
கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் எங்குள்ளது- சென்னை சைதாப்பேட்டை
அரிக்கா மேடு எம்மாநிலத்தில் உள்ளது - புதுச்சேரி
தமிழ்நாட்டில் ஊனமுற்றோருக்கான ஆசிரியர் பயிற்சி கல்லூரி எங்குள்ளது - கோவை
கல்லறை வனம் ஏற்படுத்தப்பட்டுள்ள மாநிலம் - உத்திரப்பிரதேசம்
குமரப்பருவத்தினருக்கு யார்மீது அதிக ஈடுபாடு இருக்கும் - ஒப்பார் குழு
Subscribe to:
Posts (Atom)