PUDHIYATHALAIMURAI

SCIENCE & SOCIAL MATERIAL

SURA TET MATERIAL

ENGLISH

Sunday, April 21, 2013


ஆசிரியர் தகுதித் தேர்வு இந்த ஆண்டு நடக்குமா? 

ஏகப்பட்ட வழக்குகளால் டிஆர்பி திணறல்:

மாணவர்களின் குழப்பங்களை தீர்க்க வேண்டிய ஆசிரியர்களே குழம்பிப் போய் இருக்கிறார்கள். அதற்கு பல காரணங்கள். ஆசிரியர் தேர்வு தொடர்பான அறிவிப்பில் தொடங்கிய குழப்பம், விண்ணப்ப விற்பனை, தேர்வு முறை, ரிசல்ட் வெளியீடு, அதற்குப் பிறகு படிப்பு தகுதி என தீராமல் தொடர்ந்தது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த குளறுபடிகளால் 400க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன.


இந்த நிலையில் இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் செய்வதற்கான தகுதித் தேர்வை நடத்தும் பொறுப்பு 2011ல் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு(டிஆர்பி) அளிக்கப்பட்டது. மத்திய அரசின் என்சிஇஆர்டி நடத்தும் ஆசிரியர் தேர்வை அப்படியே, தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதாக டிஆர்பி அறிவித்தது. அதேநேரத்தில் என்சிஆர்டி-யின் விதிகளை டிஆர்பி ஏற்கவில்லை. ஆனால் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகியவை, பட்டதாரிகளின் நலன் காக்கும் வகையில் மத்திய அரசின் சட்டத்தில் கூறப்பட்ட அம்சங்களை உள்ளடக்கி தகுதித் தேர்வுகளை நடத்தி வருகின்றன. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச்சில் ஆசிரியர் தேர்வு அறிவிப்பு வெளியானது. 18,343 பட்டதாரி ஆசிரிய பணியிடங்கள், 5451 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து தொடங்கியது வரிசையாக குழப்பங்கள். விண்ணப்பம் விற்பதில் தொடங்கி தேர்வு முடிவுகளை வெளியிடுவது வரை பல்வேறு குழப்பம். தகுதித் தேர்வு எழுதுவோருக்கு உரிய தகுதிகளை வாரியம் வரையறுத்து கூறவில்லை. யாரும் தேர்வு எழுதலாம் என்று அறிவித்ததின் விளைவாக, பட்டம் படித்து, பி.எட் முடித்த சுமார் 7 லட்சம் பேர் விண்ணப்பம் போட்டனர்.

அவர்களுக்கு தேர்வு மையங்களை ஒதுக்குவது, ஹால்டிக்கெட் அனுப்புவதில் பிரச்னைகள் எழுந்தன.தேர்வு முடிவில் சுமார் 1800 பட்டதாரிகளே தேர்ச்சி அடைந்தனர். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேள்வித்தாளில் இடம் பெற்ற பல கேள்விகள் பாடத்திட்டத்தில் இருந்து இடம் பெறவில்லை என்பதால் பல பட்டதாரிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மீண்டும் தேர்வு நடத்த உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் இடம் பெறும் வகையில் கேள்வித்தாள் தயாரித்து, இரண்டாம்கட்டமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்வை நடத்தினர். இரண்டாம் கட்ட தேர்வில் சுமார் 6 லட்சம் பேர் பங்கேற்றும் சுமார் 9,000 பேர்தான் தேர்ச்சி பெற்றனர்.

ஆனால் ஆசிரியர் பணியிடங்கள் 20,000 இருந்தன. இது தவிர தமிழ் வழியில் படித்தவர்களுக்கு பணி நியமனத்தில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை டிஆர்பி கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வில் இது போல பல குழப்பங்கள் ஏற்பட்டதற்கு பிறகு, இந்த ஆண்டுக்கான தேர்வை நடத்துவதா வேண்டாமா என்ற நிலையில் டிஆர்பி உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், 10 வகையான தேர்வுகளை டிஆர்பி நடத்தியுள்ளது. மேற்கண்ட 10 வகை தேர்வுகளும் குழப்பங்களில் சிக்கித் தவித்தன. தேர்வு எழுதிய பிறகு டிஆர்பியால் பாதிக்கப்பட்டதாக இதுவரை 400க்கும் மேற்பட்டவர்கள் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகளை முடிக்க முடியாமல் டிஆர்பி திணறி வருகிறது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில் இன்னும் ஒரு பகுதியினருக்கு முடிவுகளை டிஆர்பி வெளியிடவில்லை. மேலும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்வது குறித்தும் இன்னும் முடிவு எடுக்கவில்லை. அந்த பணிகள் முடிந்தால்தான், அடுத்த கட்ட தேர்வை நடத்த வேண்டும் என்று டிஆர்பி முடிவு செய்துள்ளது. அதனால் இந்த முறை ஆசிரியர் தகுதித் தேர்வு குழப்பம் இல்லாமல் நடத்தப்படுமா என்று பட்டதாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதற்கிடையே, தற்போது நாடாளுமன்றத் தேர்தல் வருவதை அடுத்து, தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதை தள்ளிப் போட அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. பட்டதாரிகளை சமாதானம் செய்வதற்காக கடந்த ஆட்சியின் இறுதியில், பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யாமல் நிலுவையில் வைக்கப்பட்ட பட்டதாரிகளின் பட்டியலை தூசு தட்டி எடுத்து, இப்போது அவர்களுக்கு பணி நியமனம் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புவரை சமூக அறிவியல் பாடங்களில் பொருளியல், வணிகவியல் பாடங்களும் சேர்க்கப்பட்டுள்ளதால் பொருளியல், வணிகவியல் பட்டம் பெற்று பி.எட் முடித்தவர்களை கீழ் வகுப்புகளில் ஆசிரியர்களாக நியமிக்கலாம் என்று பட்டதாரிகள் தொடர்ந்து கேட்டுவருகின்றனர். 

ஆனால் அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளதை தவிர வேறு எதைப்பற்றியும் டிஆர்பி அலுவலர்கள் சிந்திக்கவோ ஏற்கவோ மறுக்கின்றனர். அரசு உத்தரவுகளில் உள்ள சில நல்ல விஷயங்களையும் சுட்டிக்காட்டினால் ஏற்க மறுப்பது பட்டதாரிகளை உதாசீனம் செய்வது போல உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தகுதித் தேர்வை டிஆர்பி நடத்துமா என்ற சந்தேகம் பட்டதாரிகள் இடையே வலுத்துள்ளது.கடந்த 2012&2013ம் ஆண்டு பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை மீதான அறிவிப்பின்போது பட்டதாரி ஆசிரியர்கள் 6768, இடைநிலை ஆசிரியர்கள் 3433 பேர் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஒரு கூட்டத்தில் பேசும் போது 56000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்மீது பல சர்ச்சைகள் எழுந்தன. தற்போது சட்டப் பேரவையில் பள்ளிக் கல்லூரிகளில் 22269 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள இடங்கள் 20000 அளவுக்கு உள்ளன. இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டுக்கான பணியிடங்களை நிரப்புவது குறித்து அரசிடம் இருந்து டிஆர்பிக்கு இன்னும் உத்தரவு வரவில்லை. அரசு தகுதித் தேர்வு நடத்த முன்வருமா?

Saturday, April 20, 2013


டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் - 1

TO DOWNLOAD TET - CHILD DEVELOPMENT AND TEACHING METHODS - I CLICK HERE...



டி.என்.பி.எஸ்.சி., பாடத்திட்டங்கள் மீண்டும் மாற்றம்


டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில், மீண்டும் மொழிப்பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குரூப்-4 தேர்வில், தமிழ் மொழிக்கான கேள்விகள் எண்ணிக்கை, முன்பு இருந்த படியே 100 ஆகவும், வி.ஏ.ஓ., தேர்வில் தமிழ் அல்லது ஆங்கிலத்திற்கான கேள்விகள் 30ல் இருந்து, 80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.
புதிய பாடத்திட்ட அறிவிப்பு, அதிகாரப்பூர்வமாக, இன்று வெளியாகிறது.அரசுப் பணியில் சேருபவர்கள், திறமையானவர்களாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், தேர்வாணைய முன்னாள் தலைவர் நடராஜ், குரூப்-2, குரூப்-4, வி.ஏ.ஓ., உள்ளிட்ட தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களில், மாற்றத்தை ஏற்படுத்தினார். இதில், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழி பாடங்களுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டது.
 
இது தொடர்பாக, நடப்பு சட்டசபையில், சில எம்.எல்.ஏ.,க்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு, "மீண்டும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, தேர்வாணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது' என, பள்ளிக்கல்வி அமைச்சர், வைகை செல்வன் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, புதிய பாடத் திட்டங்களில், மீண்டும் மாற்றத்தை ஏற்படுத்தும் பணிகளில், தேர்வாணையம் ஈடுபட்டது.

குரூப்-4 தேர்வில், தமிழ் மொழிக்கான கேள்விகள் எண்ணிக்கை, பழையபடி, 100 ஆகவும், வி.ஏ.ஓ., தேர்வில், தமிழ் அல்லது ஆங்கிலத்திற்கான கேள்விகள், 30ல் இருந்து, 80 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. குரூப்-2 தேர்வில், தமிழ் அல்லது ஆங்கிலத்திற்கான, 100 கேள்விகள், முற்றிலும் நீக்கப்பட்டு, பொது அறிவில், 150 கேள்விகளும், திறன் அறிதல் பகுதியில், 50 கேள்விகள் என, உருவாக்கப்பட்டுஇருந்தது. இவை மாற்றப்பட்டு, மொழிப்பாட பிரிவில், மீண்டும், 100 கேள்விகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்று வெளியாகும் என, கூறப்படுகிறது.

Monday, April 15, 2013

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் 20 ஆயிரம் : ஆசிரியர் தகுதி தேர்வு நடப்பது எப்போது?


மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், புதிய ஆசிரியர்களை, மே மாதத்திற்குள் தேர்வு செய்து, பணி நியமனம் செய்ய, தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால், காலியாக உள்ள, 20 ஆயிரம் இடங்களை நிரப்புவதற்காக, அடுத்தகட்ட ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,) நடத்துவது குறித்து, எவ்வித அறிவிப்பையும் வெளியிடாமல், டி.ஆர்.பி., மவுனம் காத்து வருகிறது.


இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் ஆகிய இரு வகையினரும், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கு, குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது.

முதல் தேர்வு:கடந்த ஆண்டு, ஜூலை, 12ம் தேதி, முதல் டி.இ.டி., தேர்வு நடந்தது. 6.72 லட்சம் தேர்வர் பங்கேற்ற போதிலும், வெறும், 0.36 சதவீதம் பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்றனர். அதாவது, வெறும் 2,448 பேர் மட்டுமே, அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றனர். முதல் தாள் தேர்வில் (இடைநிலை ஆசிரியர்), 1,735 பேரும், இரண்டாம் தாள் தேர்வில் (பட்டதாரி ஆசிரியர்), 713 பேரும் தேர்ச்சி பெற்றனர்.கடினமான கேள்வித்தாள், குறைவான நேர ஒதுக்கீடு ஆகியவற்றால் திணறிய தேர்வர்கள், டி.ஆர்.பி., மீது சரமாரி புகார் தெரிவித்தனர். இதனால், அக்., 14ம் தேதி நடத்திய இரண்டாவது டி.இ.டி., தேர்வு கேள்வித்தாளில் கடினத்தை குறைத்ததுடன், தேர்வுக்கான நேரத்தை, ஒன்றரை மணி நேரத்தில் இருந்து, 3 மணி நேரமாக உயர்த்தியது.

இரண்டாவது தேர்வில் ஆறுதல்:இதன் காரணமாக, தேர்ச்சி, 3 சதவீதமாக அதிகரித்தது. 6.56 லட்சம் பேர் பங்கேற்ற தேர்வில், 19 ஆயிரத்து 246 பேர் தேர்ச்சி பெற்றனர். முதல் தாள் தேர்வில், 10 ஆயிரத்து 397 பேரும், இரண்டாம் தாள் தேர்வில், 8,849 பேரும் தேர்ச்சி பெற்றனர். முதல் மற்றும் இரண்டாம் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 21 ஆயிரம் பேரும், கடந்த ஆண்டு டிசம்பரில், பணி நியமனம் செய்யப்பட்டனர்.

அடுத்த தேர்வு எப்போது? எனினும், இன்னும், 20 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப, மூன்றாவது டி.இ.டி., தேர்வை, வரும் மே மாதத்திற்குள் நடத்தி முடித்து, ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கியதும், புதிய ஆசிரியர்கள், பணியில் சேரும் வகையில், முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், டி.ஆர்.பி.,யின் மெத்தனம் காரணமாக, இத்திட்டம், உடனடியாக செயல்பாட்டுக்கு வரவில்லை.தேர்வர்களும், அடுத்த டி.இ.டி., தேர்வை, ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தினமும், ஏராளமான தேர்வர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் (டி.ஆர்.பி.,), விசாரித்தபடி உள்ளனர். ஆனால், டி.ஆர்.பி., தரப்பில், எவ்வித தகவலும் தரப்படவில்லை.

டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில்,தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் தேதிக்கும், தேர்வு நடக்கும் தேதிக்கும், குறைந்தபட்சம், இரண்டரை மாதங்கள் இடைவெளி இருக்கும் வகையில், தேர்வு அட்டவணையை நிர்ணயிப்போம். ஜூன், அல்லது ஜூலையில், அடுத்த டி.இ.டி., தேர்வு நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதுகுறித்து, அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என, தெரிவித்தன.

மாணவர்களுக்கு பாதிப்பு:இரண்டாவது தேர்வு நடந்து, ஆறு மாதங்கள் ஆகின்றன. மே மாதத்தில் தேர்வை நடத்தி, விரைவாக முடிவை வெளியிட்டுருந்தால், புதிய ஆசிரியர்கள், பள்ளியில் சேர வசதியாக இருந்திருக்கும். ஜூலைக்குப் பின், தேர்வை நடத்தினால், அவர்கள், பணியில் சேர்வதற்குள் அரையாண்டு தேர்வே வந்துவிடும். இதனால், கல்வி ஆண்டு துவங்கி, முதல் ஆறு மாதங்கள், ஆசிரியர் இல்லாமல், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்.எனவே, மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு, அடுத்தகட்ட தேர்வை, டி.ஆர்.பி., விரைவாக வெளியிட வேண்டும் என்பதே, அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

முதல் இரு தேர்வு முடிவுகள்-ஒரு பார்வை
முதல் தேர்வு (ஜூலை, 2012)
முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்)
எழுதியோர்-2,83,817
தேர்ச்சி-1,735
சதவீதம்-0.55
இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்)
எழுதியோர்-3,83,666
தேர்ச்சி-713
சதவீதம்-0.17

இரண்டாவது தேர்வு (அக்., 2012)
முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்)
எழுதியோர்-2,78,725
தேர்ச்சி பெற்றோர்-10,397
சதவீதம்-3.73
இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்)
எழுதியோர்-3,77,973
தேர்ச்சி பெற்றோர்-8,849
சதவீதம்-2.34


CTET சிபிஎஸ்இ நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு

CTET சிபிஎஸ்இ நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு 
 
          மத்திய அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்புவரை ஆசிரியர்களாகப் பணியில் சேர சிபிஎஸ்இ நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டும். இத்தேர்வை எழுதுவதற்கான அறிவிப்பை சிபிஎஸ்இ தற்போது வெளியிட்டுள்ளது 
 
           கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, மத்திய திபெத்திய பள்ளிகள் போன்ற மத்திய அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாக சேர விரும்புபவர்கள் மத்திய செகண்டரி கல்வி போர்டு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டும். சண்டீகர், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், டாமன் அண்ட் டையூ, தாத்ரா அண்ட் நாகர்ஹவேலி, என்சிடி (தில்லி) ஆகிய யூனியன் பிரதேச நிர்வாகப் பகுதிக்குள் வரும் பள்ளிகளில் ஆசிரியர்களாக விரும்புபவர்களும் இத்தேர்வை எழுத வேண்டும். 
 
          தனியார் பள்ளிகளும் தங்களது பள்ளிகளில் சேர விரும்பும் ஆசிரியர்களுக்கு இத்தேர்வைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழகத்தில், பள்ளிகளில் ஆசிரியர்களாக சேருவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தனியே ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி வருகிறது. சிபிஎஸ்இ நடத்தும் இந்தத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் ஏழு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். விண்ணப்பதாரர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த தகுதித் தேர்வை எழுதலாம். தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் தங்களது மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள இத்தேர்வை மீண்டும் எழுதவும் அனுமதிக்கப்படுகிறார்கள். 
 
          ஆசிரியர் தகுதித் தேர்வில் இரண்டு தாள்கள் இருக்கின்றன. ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை பணிபுரிய விரும்பும் ஆசிரியர்கள் முதல் தாளை எழுத வேண்டும். ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுபபு வரை பணிபுரிய விரும்பும் ஆசிரியர்கள் இரண்டாவது தாளை எழுத வேண்டும். ஒன்றிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பணிபுரிய விரும்பும் ஆசிரியர்கள் இந்த இரண்டு தாள்களையும் எழுத வேண்டும். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் இத்தேர்வை எழுதலாம். ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் ஜூலை 28-ஆம் தேதி காலை 10.30 மணியிலிருந்து 12.00 மணி வரை நடைபெற உள்ளது. இரண்டாம் தாள் அன்றைய தினம் பிற்பகல் 1.30 மணியிலிருந்து 3 மணி வரை நடைபெறும். 
 
         ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு எழுத விரும்புபவர்கள், சீனியர் செகண்டரி, அதாவது பிளஸ் டூ தேர்வில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  தொடக்கக் கல்விக்கான டிப்ளமோ படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். சீனியர் செகண்டரி தேர்வில் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்று தொடக்கக் கல்வி டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் இத்தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். சீனியர் செகண்டரி தேர்வுகளில் தொடக்கக் கல்வி இளநிலைப்பட்ட (பி.இஎல்.எட்) வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் இறுதியாண்டு படித்து வரும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். சீனியர் செகண்டரி தேர்வுகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று சிறப்புக் கல்வியில் டிப்ளமோ இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு, தொடக்கக் கல்வி டிப்ளமோ படிப்பில் இறுதியாண்டு படித்து வரும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். 
 
          ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு எழுத விரும்புபவர்கள், பட்டப் படிப்பை முடித்த பிறகு, தொடக்கக் கல்விக்கான டிப்ளமோ படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, பிஎட் படிக்கும் மாணவர்களும் என்சிடிஇ விதிமுறைகளின்படி பட்டப் படிப்பில் 45சதவீத மதிப்பண்களுடன் தேர்ச்சி பெற்று பிஎட் படிக்கும் மாணவர்களும் இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். 
 
          சீனியர் செகண்டரி தேர்வுகளில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று பிஏஎட், பிஎஸ்சிஎட் நான்கு ஆண்டு பட்டப் படிப்புகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று ஓராண்டு பிஎட் (சிறப்புக் கல்வி) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் இறுதி ஆண்டு தேர்வு எழுத இருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினார், ஓபிசி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு மதிப்பெண்களின் 5 சதவீத விலக்கு உண்டு. கல்வி தொடர்பான பட்டப் படிப்பு அல்லது டிப்ளமோ படிப்புகள், தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) அங்கீகாரம் பெற்றவையாக இருக்க வேண்டும். பிஎட் சிறப்புக் கல்விப் படிப்பு, இந்திய மறுவாழ்வுக் கவுன்சில் அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும். 
 
               இந்தத் தகுதித் தேர்வில் முதல் தாள் அல்லது இரண்டாவது தாளை எழுத விரும்பும் பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250. இரண்டு தாள்களையும் எழுத விரும்பும் பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.800. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.400. விண்ணப்பிப்பதற்கான விரிவான விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசித் தேதி 16-4-2013.

 விவரங்களுக்கு: www.ctet.nic.in