PUDHIYATHALAIMURAI

SCIENCE & SOCIAL MATERIAL

SURA TET MATERIAL

ENGLISH

Friday, March 29, 2013


தகுதி தேர்வை காரணமாக கொண்டு பட்டதாரி ஆசிரியரை வெளியேற்ற தடை


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனக்கூறி, தேனி பட்டதாரி ஆசிரியரை வெளியேற்றும் உத்தரவிற்கு, மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது.

தேனியைச் சேர்ந்த  ராதிகா என்பவர் தாக்கல் செய்த மனு: நான் தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிகிறேன். என்னை ஆசிரியராக நியமிப்பதற்கான நடைமுறை, 2010 ஆக., 23க்கு முன் துவங்கியது. அந்த தேதிக்கு முன், நியமிக்கப்பட்டவர்கள், ஆசிரியர் தகுதித்தேர்வு ( டி.இ.டி.,) எழுதத் தேவையில்லை என, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.,) அறிவித்துள்ளது.

ஆனால், 2010 ஆக., 23க்கு பின், நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பணி நியமனத்தை, ரத்து செய்வதாக தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். இதனால், எனக்கு சம்பளத்தை நிறுத்தி விட்டனர். என்.சி.டி.இ.,விதிகள்படி, டி.இ.டி., தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி, ஏற்கனவே நான் அரசிடம் மனு அளித்தேன். அது நிலுவையில் உள்ளது.

கட்டாயக் கல்விச் சட்டப்படி, 2012 ஏப்., 12க்கு பின், நியமிக்கப்பட்டவர்களை, டி.இ.டி., தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும், என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. டி.இ.டி.,யில் தேர்ச்சி பெறாதவர்களை, பணி நீக்கம் செய்யக் கூடாது என, எனக்கு பின் வேலையில் சேர்ந்தவர்கள், ஏற்கனவே ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றுள்ளனர். 

தேனி முதன்மைக் கல்வி அலுவலர், 2010 ஆக., 27ல், எனக்கு அளித்த நியமன உத்தரவில், டி.இ.டி., தேர்ச்சி பெற வேண்டும் என, நிபந்தனை விதிக்கவில்லை. என்னை பணி நீக்கம் செய்வதற்கு தடை விதித்து, டி.இ.டி., தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டார். 

நீதிபதி டி.அரிபரந்தாமன் முன், விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் லஜபதிராய் ஆஜரானார். நீதிபதி, "மனுதாரரை வெளியேற்றும் உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது" என்றார்.

டாக்டர்,செவிலியர்,ஆசிரியர்பணி இடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் கே.பி.முனுசாமி


                சட்டசபையில் இன்று உறுப்பினர்கள் சவுந்திர ராஜன் (மார்க்சிஸ்டு கம்யூ.), ஆறுமுகம் (இந்திய கம்யூ.), என்.ஆர்.ரங்கநாதன் (காங்) ஆகியோர் கவன ஈர்ப்பு கொண்டு வந்தனர். அவர்கள் கூறும் போது, தமிழக அரசு அலுவலகங்களில் அதிகரித்து வரும் காலி பணியிடங்களை பூர்த்தி செய்து நிர்வாக பணிகளை தொய்வின்றி நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்கள். 
          இதற்கு பதில் அளித்து நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியதாவது:- 

               அரசு அலுவலகங்களில் காலி பணியிடங்களை நிரப்பும் அமைப்புக்களான தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடை பணியாளர்கள் தேர்வு குழுமம், வேலை வாய்ப்பகங்கள், தேர்வு குழுக்கள் ஆகியவை மூலம் போட்டி தேர்வு, நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு காலி பணியிடங்களில் நியமனம் செய்யப்படுகின்றனர். மேலும் ஒவ்வொரு பதவிக்கான சிறப்பு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள நியமன முறைகள் மூலம், பதவிகள் நிரப்பப் பட்டு வருகின்றது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், வேலை வாய்ப்பகம் மூலம் அரசு துறைகளில் 54,420 பணியிடங்கள் நிரப்பட்டுள்ளன. 

             தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 13,581 பணியிடங்களும் மற்ற கல்லூரிகளில் 64,435 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. 16,793 சத்துணவு அமைப் பாளர்கள், சமையல், சமையல் உதவியாளர் பணியிடங்களும் 11,803 அங்கன் வாடி பணியாளர் பணியிடங்களும் நிரப்பப் பட்டுள்ளன. அரசு போக்குவரத்து கழகங்களில் 16,963 பணியிடங் களும் கூட்டுறவு நியாய விலை கடைகளில் 6,307 பணியிடங்களும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 5,489 பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. மற்றும் பல்வேறு அரசு துறை நிறுவனங்களில் 3717 பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. 

                         மேலும் 22,269 ஆசிரியர் பணியிடங்களும், 1091 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 4,042 பணியிடங்களும், கூட்டுறவு வங்கிகளில் 3607 பணியிடங்களும், தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 10,105 காலி பணியிடங்களும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மருத்துவ பணி கழகத்தால் 2,159 மருத்துவர்கள், 4 ஆயிரம் செவிலியர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. எனவே காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பணி தொடர்ந்து நடைபெறுவதால் நிர்வாக பணிகள் தொய்வின்றி நடக்கிறது. ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்தில் அதிகப்படியான காலி பணியிடங்களை இந்த அரசு நிரப்பி உள்ளது. இதனால் அரசு நிர்வாகமும் சரியாக நடைபெறுகிறது. 

இவ்வாறு அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார்.

Monday, March 25, 2013
















TNTET PAPER I STUDY MATERIAL

...............................................................................................................................

இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள கீழே உள்ளவற்றை கிளிக் செய்யவும்.

Mini guide ror TET English (62 pages) 

Newகல்வி உளவியல் தாள்-1,2 வினாவி

டைகணக்கு பாட பகுதிகள் (தாள்1)

7th maths - English medium6, 7th maths English medium

7-ம் வகுப்பு கணிதம் வினாக்கள்  

 7-ம் வகுப்பு அறிவியல் வினாக்கள்யார் கண்டுபிடித்தது? 

(அறிவியல் 1 முதல் 10-ம் வகுப்பு வரை

)8-ம் வகுப்பு உயிரியல் வினாக்கள்

8-ம் வகுப்பு இயற்பியல் வேதியியல் வினாக்கள்

.6, 7-ம் வகுப்பு அறிவியல் குறிப்புகள

TAMILNADU GOVERNMENT TET 



  

Thanks to Mr. Mani Kandan, M.A., M.Phil., B.Ed.,
Radhapuram Vil, Thandarampet TK,
Thiruvannamalai Dt.

CENTRAL TEACHER ELIGIBILITY TEST (CTET) CENTRAL BOARD OF SECONDARY EDUCATION-PREVIOUS YEAR QUESTION PAPER



Central Teacher Eligibility Test (CTET)
CENTRAL BOARD OF SECONDARY EDUCATION
CTET JUNE – 2011
CTET JAN – 2012
CTET MAY – 2012
CTET NOV – 2012

Thursday, March 21, 2013



TET STUDY MATERIAL



Prepared By
Mr. K. PremKumar, 
BT Asst in Maths,
Thirumangalam,
Madurai.

Tuesday, March 12, 2013




டி.இ.டி: அறிவியல் வினா - விடை

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: மரம்: அறிவியல் வினா - விடை

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: உடலியல்: அறிவியல் வினா - விடை

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: மாற்றம்: அறிவியல் வினா - விடை

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: ஒளியியல் : அறிவியல் வினா - விடை

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: ஆற்றலின் வகைகள்: அறிவியல் வினா - விடை

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: செல்லின் அமைப்பு: அறிவியல் வினா - விடை

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: அளவீடுகளும் இயக்கமும்:அறிவியல் வினா - விடை

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: காந்தவியல்: அறிவியல் வினா - விடை

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: பொருள்களைப் பிரித்தல்: அறிவியல் வினா - விடை