அடுத்த ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) தேதி குறித்த எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரை இல்லை. குறுந்தகவல் செய்திகள் வெறும் யூகமே
அடுத்தமுறை தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கும் பணியமர்வு பெற அதிக வாய்ப்பு இருப்பதாலும் TET குறித்த எந்த செய்திக்கும் இப்போது தமிழகத்தில் அதிக முக்கியத்துவம் இருப்பதாலும், அது குறித்த யுகங்களுக்கும் வதந்திகளுக்கும் விரைவாக பரவுகின்றது.
அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு எப்பொழுது என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது.
இதற்கு விடை அளிக்கும் படி கடந்த ஒரு வாரமாக குறுந்தகவல்களில் பரவி வரும் அதிகாரபூர்வமற்ற ஒரு தேதி சூன் 3 - 2013 அன்று.
மற்றும் மார்ச் 22 முதல் ஏப்ரல் 22 வரை விண்ணப்பங்கள் அளிக்கப்பட உள்ளன என்றும் அந்த குறுந்தகவல் செய்திகள் தமிழகம் முழுவதும் உலாவருகின்றன.
ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.
B.Ed தேர்வினை ஏப்ரல் மாதத்திலேயே முடிக்கும் படி மட்டும் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் ஒரு ஏற்பாட்டினை செய்திருப்பதாக சென்றவாரம் செய்தி வெளியாகி இருந்தது.
மற்றபடி ஆசிரியர் தகுதித் தேர்வினை பற்றிய எவ்வித தேதி அறிவிப்பும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை என்பதை கருத்தில் கொள்ளவும்.
வரும் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விண்ணப்பங்கள் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்படி ஏற்பாடு செய்யப்படும் என்று TRB ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் சென்ற முறை அறிவிக்கப்பட்டபடியே தேதிகள் இந்த முறையும் இருக்கும் என்ற கணிப்பில்தான் இந்த தேதிகளை யாரோ உலவ விட்டிருக்கிறார்கள் .
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை பரபரப்புக்காக வெளியிடுவது தவிர்க்கப்படவேண்டும். இத்தகைய செய்திகளின் நம்பகத்தன்மை அறியாமல் வெளியிடுவது பலரை பாதிக்கும் என்பதை உணர்வது நலம்.

இன்னும் இரண்டு TET தேர்விற்குள் வெற்றி பெறுபவர்களுக்கு பணி பெறும் வாய்ப்பு உள்ளது. அதுவரை TET குறித்த பரபரப்புகள் இருந்துக்கொண்டே இருக்கும். உணர்சிவயமோ அலட்சியமோ படாமல் அதற்குள் வெற்றிபெறுவதுதான் சமயோசிதம். அதன் பிறகு TET வெற்றிபெற்றவர்கள் குறிப்பிட்ட Rank வரை பணி வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. பிறர் வெற்றி பெற்றாலும் 7 ஆண்டுகளுக்கான தகுதிச்சான்றாகவே இருக்கும்.