Posting போடாமல் ஏன் காலதாமதம் நடக்கிறது என PG மற்றும் TET தேர்வில் வெற்றி பெற்ற பலருக்கும் ஆதங்கம் இருக்கிறது. அவர்களுக்க்காகவே இந்த கட்டுரையை நாம் வெளியிட்டு உள்ளோம்.
ஒரு பணியிடத்தை நிரப்புவதற்கு ஆரம்பகட்ட அடிப்படை பணிகள் பலவற்றை பள்ளி கல்வி துறை செய்ய வேண்டி உள்ளது.
1. பள்ளி கல்வி துறை செயலர் ஒரு பணியிடம் நிரப்ப தேவையான தகுதிகளை வரையறுத்து அரசாணை வெளியிடுவார்.
2. அரசாணையை TRB யிடம் ஒப்படைத்து அந்த தகுதியில் உள்ளவர்களுக்கு தேர்வு நடக்கும்.
3. தேர்வு முடிந்து வெற்றி பெற்றவர்கள் பட்டியல் வெளியான பிறகு அடுத்தகட்ட பணிகள் தொடங்கும்.
4. பள்ளி கல்வி துறை காலி பணியிட பட்டியல் பள்ளி வாரியாக தயாரிக்கும்.
தற்போதைய நிலையில் பள்ளி கல்வி துறை மற்றும் தொடக்க கல்வி துறையில் உள்ள பணியிடங்கள் online இல் www.Tndse.Comவலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் முதல் முறையாக தமிழகத்தில் உள்ள அணைத்து பள்ளிகள் மற்றும் உதவி தொடக்க கல்வி அலுவலகங்கள் காலி பணியிடத்தை பதிவு செய்ததில் ஏற்பட்ட சிறு தவறுகளின் பட்டியலை இயக்குனரகம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி வைத்து அதில் உள்ள குறைகளை களைய கேட்டு கொண்டது. பள்ளிகள் மற்றும் AEO அலுவலகங்களில் இருந்து காலி பணியிட பட்டியல் நேரடியாக மாவட்ட கல்வி அதிகாரி மூலம் பெறப்பட்டு இணைய தளத்தில் உள்ள குறைகள் களைந்து இறுதி அறிக்கை அனுப்பும் இந்த பணிகள் சென்ற வாரத்தில் மிக முனைப்போடு நடத்தப்பட்டு நேற்று இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
4. முழுமையாக காலி பணியிட பட்டியல் பெற்ற பிறகு TRB இடம் பட்டியலை ஒப்படைத்து அதற்க்கு தகுதியான நபர்களை மட்டும் பரிந்துரைக்குமாறு கல்வி துறை கேட்டு கொள்ளும்.
5. பட்டியல் கல்வி துறையால் பெறப்பட்ட பிறகு உடனடியாக காலியிடம் நிரப்ப மாவட்ட வாரியாக Online கலந்தாய்வு நடத்தப்பட்டு உடனடியாக பணியில் சேர ஆணை வழங்கப்படும் வாய்ப்பு அதிகம்.
குறிப்பு: TET posting தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளதே தவிர posting வழங்கும் பணிகளை நிறுத்த வேண்டும் என இடைக்கால தடை ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பதால் மிக விரைவாக பணிகள் நடந்து வருவதாக கல்வி துறை வட்டாரம் தெரிவித்து உள்ளது.
(ஊக செய்திகள் மட்டுமே )